பலோடா பஜார் மாவட்டம்
Appearance
பலோடா பஜார் மாவட்டம் (Baloda Bazar district) மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் ஆகும்.[1] ராய்ப்பூர் கோட்டத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பலோடா பஜார் ஆகும்.
இம்மாவட்டம் ராய்ப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளை கொண்டு உருவாக்கப்பட்டது. மாநிலத் தலைநகரம் ராய்ப்பூரிலிருந்து வடகிழக்கே எண்பத்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் பலோடா பஜார் நகரம் அமைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவடடம் 9 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[2]
மாவட்ட எல்லைகள்
[தொகு]பலோடா பஜார் மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கில் பிலாஸ்பூர் மாவட்டம், கிழக்கில் ராய்கர் மாவட்டம் மற்றும் மகாசமுந்து மாவட்டம், தெற்கில் ராய்ப்பூர் மாவட்டம் மற்றும் துர்க் மாவட்டம், மேற்கில் பெமேதரா மாவட்டம் அமைந்துள்ளது.