கைராகர்-சுய்காடன்-கண்டாய் மாவட்டம்
கைராகர்-சுய்காடன்-கண்டாய் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
![]() சத்தீஸ்கர் மாநிலத்தில் கைராகர்-சுய்காடன்-கண்டாய் மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (Khairagarh-Chhuikhadan-Gandai): 21°32′N 80°59′E / 21.53°N 80.98°E | |
நாடு | ![]() |
மாநிலம் | சத்தீஸ்கர் |
கோட்டம் | துர்க் |
நிறுவப்பட்ட நாள் | 10 செப்டம்பர் 2022 |
வருவாய் வட்டங்கள் | 2 |
அரசு | |
• சட்டமன்றத் தொகுதி | 1 |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,68,444 |
மக்கள் தொகை | |
• பாலின விகிதம் | 1018 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
கைராகர்-சுய்காடன்-கண்டாய் மாவட்டம் (Khairagarh-Chhuikhadan-Gandai) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் அமைந்துள்ளது. இப்புதிய மாவட்டத்தை, 2022-ஆம் ஆண்டில் ராஜ்ந்ந்துகாவ் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 10 செப்டம்பர் 2022 அன்று முதலமைச்சர் பூபேஷ் பாகல் துவக்கி வைத்தார்.[1]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3,68,444 ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 92.34%, பழங்குடியினர் சமயம் 5.49%, இசுலாமியர் 1.18 மற்றும் பிறர் 0.99% ஆகவுள்ளனர்.[2] இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 40,119 (10.89%) மற்றும் 50,801 (13.79%) ஆகவுள்ளனர்.[3]
சத்தீஸ்கர் மொழியை 93.97% மக்களும், இந்தியை 2.97% மக்களும், கோண்டி மொழியை 2.11% மக்களும் மற்றும் பிற மொழிகளை 0.95% மக்களும் பேசுகின்றனர். இதன் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1018 பெண்கள் வீதம் உள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chhattisgarh gets three new districts in 2 days, Baghel says 'overwhelmed by…'
- ↑ "Table C-01 Population by Religion: Chhattisgarh". censusindia.gov.in. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். 2011.
- ↑ "District Census Handbook: Rajnandgaon" (PDF). censusindia.gov.in. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். 2011.