சூரஜ்பூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூரஜ்பூர் மாவட்டம்
सूरजपुर जिला
Map Chhattisgarh state and districts.png
சூரஜ்பூர்மாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர்
மாநிலம்சத்தீஸ்கர், இந்தியா
நிர்வாக பிரிவுகள்மாவட்டம்
தலைமையகம்சூரஜ்பூர்
மக்கட்தொகை6,60,280
படிப்பறிவு89%
வட்டங்கள்6
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 43
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சூரஜ்பூர் மாவட்டம் (Surajpur District) மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் 28 மாவட்டங்களில் ஒன்றாகும். சூரஜ்பூர் கோட்டத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். 1 சனவரி 2012-ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் சூரஜ்பூர் ஆகும். சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து வடக்கே 256 தொலைவில் சூரஜ்பூர் நகரம் அமைந்துள்ளது.

தமோர் பிங்களா காட்டுயிர் காப்பகம் இம்மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடமாகும். தேசிய நெடுஞ்சாலை எண் 43 இம்மாவட்டத்தின் வழியாக செல்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டங்களில் முதல் இடத்தில் சூரஜ்பூர் மாவட்டம் உள்ளது.

மாவட்ட எல்லைகள்[தொகு]

இம்மாவட்டத்தின் வடகிழக்கில் ஜார்கண்ட் மாநிலமும், வடமேற்கில் உத்தரப் பிரதேசம் மாநிலமும், கிழக்கில் பலராம்பூர் மாவட்டமும், தெற்கில் கோர்பா மாவட்டமும் மற்றும் மேற்கில் கோரியா மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 6,60,280 ஆக உள்ளது. [1] அதில் ஆண்கள் 53 விழுக்காடாகவும் மற்றும் பெண்கள் 47 விழுக்காடாகவும் உள்ளனர். சூரஜ்பூர் மாவட்டத்தின் படிப்பறிவு, தேசிய சராசரி படிப்பறிவான 59.5%-ஐ விட கூடுதலாக, 89 விழுக்காடாக உள்ளது. ஆண்களின் படிப்பறிவு 90% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 88% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, மொத்த மக்கள்தொகையில் 16 விழுக்காடாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

சூரஜ்பூர் மாவட்டம் பிரதாப்பூர், ஒடகி, பையாத்தான், இராமானுஜ்நகர், பிரேம் நகர் மற்றும் சூரஜ்பூர் என ஆறு வருவாய் வட்டங்களை கொண்டது.

பார்க்க வேண்டிய இடங்கள்[தொகு]

சூரஜ் மாவட்டத்தில் உள்ள தமோர் பிங்களா காட்டுயிர் காப்பகம் , தேவ்கர், ராம்கரில் உள்ள சீதாகுளம், சீதா பெங்குரா குகைகள், காளிதாஸ் மேகதூதம், குடர்கரில் உள்ள பாகேஸ்வரி தேவி கோயில், பையாத்தானில் உள்ள படால் பைரவர் கோயில், பிரேம்நகரில் உள்ள மகேஸ்வரி கோயில் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. 2004-06-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=live (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரஜ்பூர்_மாவட்டம்&oldid=3245738" இருந்து மீள்விக்கப்பட்டது