உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மத்திய இந்தியா
Location of மத்திய இந்தியா
நாடு இந்தியா
மாநிலங்கள்
பெரிய நகரம்இந்தூர்
மக்கள் தொகை மிக்க நகரங்கள(2011)
பரப்பளவு
 • மொத்தம்443,443 km2 (1,71,214 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்10,05,25,580
 • அடர்த்தி230/km2 (590/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (UTC+5:30)
அலுவல் மொழிகள்
அசோகர் கி மு 3ஆம் நூற்றாண்டில் நிறுவிய சாஞ்சி தூபி, மத்திய இந்தியா
கஜுராஹோ கோயில், மத்திய மத்தியா

மத்திய இந்தியா (Central India), மத்தியப் பிரதேசம், கிழக்கு மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் பரப்புகளைக் கொண்டது. [1][2][3]மத்திய இந்தியாவின் வணிகத் தலைநகரமான இந்தூர், மத்திய இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரம் ஆகும். போபால் மற்றும் ராய்பூர் பிற முக்கிய நகரங்கள் ஆகும். மத்திய இந்தியாவில் வட இந்தியாவின் பண்பாட்டுத் தாக்கம் கொண்டதால், இந்தி மொழி மற்றும் வட்டார மொழிகள் அதிகம் பேசப்படுகிறது.

வரலாறு

[தொகு]

மத்திய இந்தியாவில் கற்கால குடியிருப்புகள் இருந்ததற்கு பீம்பேட்கா குகைகள் சான்றாக உள்ளது. நர்மதை ஆற்றுச் சமவெளியின் பல்வேறு இடங்களில் கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏரண், கயதா, மகேஷ்வர், நாக்தா மற்றும் நவ்ததோலி இடங்களில் செம்புக்காலத்திய தொல்லியல் களங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிமு 30,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்களுடன் குகைகள் மத்திய இந்தியாவில் பல்வேறு இடங்களில் கண்பிடிக்கப்பட்டுள்ளது. தற்கால மனிதக் குடியிருப்புகள் துவக்கத்தில் நர்மதை ஆறு, சம்பல் ஆறு மற்றும் பேட்வா ஆற்றுச் சமவெளிகளில் உருவானது.

வேதகாலத்தில் மத்திய இந்தியாவின் விந்திய மலைத்தொடர், இந்தோ ஆரியர்களின் தெற்கு எல்லையாக விளங்கியது.

மராத்தியப் பேரரசின் ஒரு கிளையான ஓல்கர் வம்சத்தினர், இந்தூர் இராச்சியத்தை ஆண்டனர்.

விந்தியப் பிரதேசத்தின் தற்கால புந்தேல்கண்ட் மற்றும் பகேல்கண்ட் பகுதிகளை ஆண்ட 35 சுதேச சமஸ்தானங்கள், 1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1956ல் மத்திய பாரதம் மற்றும் விந்தியப் பிரதேச மாநிலங்கள் மற்றும் போபால் ஆகிய பகுதிகள் மத்தியப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது. 2000ம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளைப் பிரித்து சத்தீஸ்கர் மாநிலம் நிறுவப்பட்டது.

பொருளாதாரம்

[தொகு]

மத்திய இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.25 இலட்சம் கோடி ரூபாய் ஆகும். [4][5]

மத்திய இந்தியா, நிலக்கரியால் இயங்கும் அனல் மின்நிலையங்கள் மூலம் இந்தியாவின் 10.96% சதவீத மின்சாரம் உற்பத்தி செய்கிறது [6]

பண்பாடு

[தொகு]

மொழி

[தொகு]

மத்திய இந்தியா, இந்தி பேசும் பகுதியில் அமைந்துள்ளதால், இந்தி மொழி அதிகம் பேசப்படுகிறது. மேலும் பழங்குடி இன மக்கள் முண்டா மொழிகள், கொற்கு மொழி போண்டா மொழி மற்றும் கோண்டி மொழி பேசுகின்றனர்.

மத்திய இந்தியாவின் புவியியல்

[தொகு]

மத்திய இந்தியாவின் முக்கிய புவியியல் பிரதேசங்கள் கோண்டுவானா, புந்தேல்கண்ட், மால்வா பீடபூமி மற்றும் தக்கான பீடபூமியின் விதர்பா ஆகும். மத்திய இந்தியாவில் விந்திய மலைத்தொடர் மற்றும் சாத்பூரா மலைத்தொடர்கள் பரவியுள்ளது. மேலும் இப்பகுதியில் நர்மதை ஆறு, சம்பல் ஆறு மற்றும் பேட்வா ஆறுகள் பாய்கிறது.

மத்திய இந்தியாவின் பிரச்சனைகள்

[தொகு]

மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மலைக்காடுகளில் காடுகளை நம்பி உள்ள பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளான பஸ்தர், பிஜப்பூர், தந்தேவாடா, ராஜ்நாந்துகாவ், சுக்மா, நாராயண்பூர், சர்குஜா, கோரியா, ஜஷ்பூர், காங்கேர் மாவட்டங்களில் ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகளால் இப்பகுதி மக்களுக்கும், அரசுப் படைக்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.[7]

புகழ் பெற்ற இடங்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pocock, R. I. (1939). The Fauna of British India, including Ceylon and Burma. Mammalia. – Volume 1. London: Taylor and Francis Ltd. pp. 212–222.
  2. Nowell, K., Jackson, P. (1996). Wild Cats: Status Survey and Conservation Action Plan (PDF). Gland, Switzerland: IUCN/SSC Cat Specialist Group. pp. 17–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-8317-0045-0.
  3. D. K. Harshey & Kailash Chandra (2001). Mammals of Madhya Pradesh and Chhattisgarh. Zoos´ Print Journal 16(12): 659-668 online பரணிடப்பட்டது 2018-06-02 at the வந்தவழி இயந்திரம்
  4. "Madhya Pradesh Budget Analysis 2017–18" (PDF). PRS Legislative Research. Archived from the original (PDF) on 9 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 March 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "STATE WISE DATA" (PDF). Economic Statistical Organisation Punjab. Central Statistical Organisation, New Delhi. Archived from the original (PDF) on 10 மார்ச்சு 2017. பார்க்கப்பட்ட நாள் 17 பெப்பிரவரி 2017.
  6. "Executive summary of month of November 2015" (PDF). Central Electricity Authority, Ministry of Power, Government of India. Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 December 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Sukma Naxal Attack: 25 CRPF Men Killed By Maoists In Chhattisgarh
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_இந்தியா&oldid=4060251" இலிருந்து மீள்விக்கப்பட்டது