சம்பல் ஆறு
சம்பல் ஆறு | |
River | |
சம்பல் ஆறு, தோல்பூர், இராஜஸ்தான்
| |
நாடு | ![]() |
---|---|
மாநிலங்கள் | மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் |
கிளையாறுகள் | |
- இடம் | பனாஸ் ஆறு, மெஜ் ஆறு |
- வலம் | பார்வதி ஆறு (ம பி), காளி சிந்து ஆறு, சிப்ரா ஆறு |
உற்பத்தியாகும் இடம் | மன்புரா அருகில் |
- அமைவிடம் | ஜானப்போ மலைகள் (Janapao Hills), இந்தூர் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா |
- உயர்வு | 843 மீ (2,766 அடி) |
- ஆள்கூறு | 22°27′N 75°31′E / 22.450°N 75.517°E |
கழிமுகம் | யமுனை ஆறு |
- அமைவிடம் | சஹொன் (sahon), பிண்டு மாவட்டம் ம பி மற்றும் இட்டாவா மாவட்டம் (உ பி), மத்தியப் பிரதேசம், இந்தியா |
- elevation | 122 மீ (400 அடி) |
- ஆள்கூறு | 26°29′20″N 79°15′10″E / 26.48889°N 79.25278°E |
நீளம் | 960 கிமீ (596.5 மைல்) |
வடிநிலம் | 1,43,219 கிமீ² (55,297.2 ச.மைல்) |
Discharge | |
- சராசரி | [1] |
- மிகக் கூடிய | |
- மிகக் குறைந்த | |
சம்பல் ஆறு (Chambal River) இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தியாகி
இராஜஸ்தான் மாநிலம் வழியாக பாய்ந்து, இறுதியில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் யமுனை ஆற்றில் கலக்கிறது. சம்பல் ஆறு, யமுனை ஆற்றின் துணை ஆறாகும். சிப்ரா ஆறு, காளி சிந்து ஆறு மற்றும் பார்வதி ஆறுகள் சம்பல் ஆற்றில் கலக்கிறது.
பிறப்பிடம், பாயுமிடங்கள், கலக்குமிடம்[தொகு]
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் அருகே 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விந்திய மலையில் 843 மீட்டர்s (2,766 ft) உயரத்தில் உள்ள சிங்கர் சௌரி கொடுமுடியில் உற்பத்தியாகும் சம்பல் ஆறு 960 கிலோமீட்டர்கள் (600 mi) நீளம் கொண்டது.
சம்பல் ஆறு முதலில் மத்தியப் பிரதேசத்தின் வடக்கில் 346 கி மீ தொலைவிற்கு பாய்ந்து, பின்னர் வடகிழக்கில் 225 கி மீ தொலைவிற்கு இராஜஸ்தான் மாநிலம் வழியாகப் பாய்கிறது. பின்னர் சம்பல் ஆறு மத்தியப் பிரதேசம் - உத்தரப் பிரதேச எல்லைகள் வழியாக 145 கி மீ தொலைவிற்குப் பாய்கிறது. பின்னர் இறுதியாக உத்தரப் பிரதேசத்தின் இட்டாவா மாவட்டத்தில் யமுனை ஆற்றுடன் கலக்கிறது.
சம்பல் ஆற்றின் நீர்த்தேக்கங்கள்[தொகு]
- காந்திசாகர் நீர்த்தேகம்
- இராணா பிரதாப் சாகர் நீர்த்தேக்கம்
- ஜவஹர் சாகர் நீர்த்தேக்கம்
- கோட்டா தடுப்பணை
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Assessment of minimum water flow requirements of Chambal River in the context of Gharial (Gavialis gangeticus) and Gangetic Dolphin (Platanista gangetica) conservation". Wildlife Institute of India (April 2011). பார்த்த நாள் 11 February 2014.