சிப்ரா ஆறு

ஆள்கூறுகள்: 22°54′00″N 75°58′59″E / 22.900°N 75.983°E / 22.900; 75.983
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஸ்ரீராம் படித்துறை, சிப்ரா ஆறு, உஜ்ஜைன்
சிப்ரா ஆற்றில் மழை வேண்டி பூஜை செய்யும் காட்சி, உஜ்ஜைன்

சிப்ரா ஆறு (Shipra) இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தி ஆகும் வற்றாத ஆறுகளில் ஒன்றாகும். சிப்ரா ஆறு, இந்தூர் மாவட்டத்தின் உஜ்ஜைனில் விந்திய மலைதொடரில் உற்பத்தியாகி மால்வா பீடபூமி வழியாக 120 கிலோ மீட்டர் வரை பாய்ந்து, பின்னர் மத்தியப் பிரதேசம் – இராஜஸ்தான் எல்லை மாவட்டமான மண்டசௌர் மாவட்டத்தில் சம்பல் ஆற்றில் கலக்கிறது. [1]

சிறப்புகள்[தொகு]

வற்றாத சிப்ரா ஆறு கங்கை, காவேரி போன்று, புனித ஆறுகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. [2] உச்சினி மகாகாலேஸ்வரர் கோயில் அருகே பாயும் புனித ஆறான சிப்ரா ஆற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோயில் அருகில் பாயும் வற்றாத ஆறான சிப்ரா ஆறு கங்கை, காவேரி போன்று, புனித ஆறுகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

கிருட்டிணன், பலராமன் மற்றும் குசேலர் படித்த குருகுலமான சாந்திபனி முனிவரின் ஆஸ்ரமம் சிப்ரா ஆற்றாங்கரையில் இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்ரா_ஆறு&oldid=3554069" இருந்து மீள்விக்கப்பட்டது