உள்ளடக்கத்துக்குச் செல்

காகர் நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காகர் நதி (Ghaggar river, தேவநாகரி: घग्गर हकरा, குர்முகி: ਘੱਗਰ ਹਕਰਾ, ஷாமுகி: گهگـر هکره) இந்தியத் துணைக்கண்டத்தில் ஓடும் ஒரு பருவகால ஆறாகும். இது பருவப் பெயர்ச்சிக் காற்றின் போது இமயமலையில் தோன்றி, பஞ்சாப் அரியானா மாநிலங்களுக்குள் ஊடாக யமுனை மற்றும் சத்லஜ் ஆறு ஆறுகளுகிடையான சமவெளியில் பாய்கிறது, அரியானா பய்கன்னர் என்னும் இடத்தில், ராஜஸ்தான் பாலைவனத்தில் நுழைகிறது. இதற்கு சரசுவதி, சரஸ்வதி அல்லது சூர்ஸ்வதி என்ற கிளை நதியும் உண்டு.

சப்த நதிகள் (சமக்கிருதம்: सप्त सिंधु-சப்த சிந்து -ஏழு நதிகள்/ஆறுகள்) இருக்கு வேதம் (சமக்கிருதம்: ऋग्वेद - ரிக்வேத) இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்றான இருக்கு வேதத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் ஓடும் நதிகளில் ஏழு நதிகளை புனிதமாக குறிப்பிடப்பட்டுள்ள சப்த நதிகள் ஒன்றான சரசுவதி ஆறு இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்பது தொல்பொருளியல் அகழ்வாய்வார்களின் கருத்து.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காகர்_நதி&oldid=2998575" இலிருந்து மீள்விக்கப்பட்டது