அனுமான்காட்

ஆள்கூறுகள்: 29°35′N 74°19′E / 29.58°N 74.32°E / 29.58; 74.32
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுமான்காட்
நகரம்
அனுமான்காட் கோட்டை
அனுமான்காட் நகரத்தின் கோட்டை
அனுமான்காட் is located in இராசத்தான்
அனுமான்காட்
அனுமான்காட்
அனுமான்காட் is located in இந்தியா
அனுமான்காட்
அனுமான்காட்
அனுமான்காட் is located in ஆசியா
அனுமான்காட்
அனுமான்காட்
ஆள்கூறுகள்: 29°35′N 74°19′E / 29.58°N 74.32°E / 29.58; 74.32
நாடுஇந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்அனுமான்காட்
தோற்றுவித்தவர்மன்னர் பாகுபத்
அரசு
 • நிர்வாகம்நகராட்சி
ஏற்றம்177 m (581 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,50,958
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி[1]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்335512 & 335513
தொலைபேசி குறியீடு எண்01552
வாகனப் பதிவுRJ-31
இணையதளம்hanumangarh.rajasthan.gov.in

அனுமான்காட் (Hanumangarh), இந்தியாவின் மேற்கில் உள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் வடக்கில் அமைந்த அனுமான்காட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூருக்கு வடமேற்கே 400 கிலோ மீட்டர் தொலைவிலும்; இந்தியத் தலைநகரான புது தில்லிக்கு மேற்கே 380 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, அனுமான்காட் நகரத்தின் மக்கள் தொகை 1,50,958 ஆகும். அதில் ஆண்கள் 79,709 மற்றும் 71,249 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 894 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 18,094 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 76.88% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 82.17 %, இசுலாமியர் 7.33%, சமணர்கள் 0.40%, சீக்கியர்கள் 9.75%, கிறித்தவர்கள் 0.20% மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர்.[2]

அனுமான்காட் சந்திப்பு தொடருந்து நிலையம்[தொகு]

Hanumangarh railway station.
அனுமான்காட் சந்திப்பு தொடருந்து நிலையம்
Bhagat singh chowk.
அனுமான்காட் சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கு வெளியே பகத் சிங் சதுக்கம்

ஜோத்பூர்-பட்டிண்டா செல்லும் இருப்புப் பாதையில் உள்ள அனுமான்காட் சந்திப்பு தொடருந்து நிலையம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.[3]

கல்வி[தொகு]

  • அரசு என் எம் பி ஜி கல்லூரி
  • ரையான் கல்லூரி
  • சாரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  • அரசு நேரு நினைவு பட்டமேற்படிப்புக் கல்லூரி, அனுமான்காட் நகரம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுமான்காட்&oldid=3517901" இருந்து மீள்விக்கப்பட்டது