அஜ்மீர் தர்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஜ்மீர் தர்கா

அஜ்மீர் தர்கா என்பது சூபி ஞானி காஜா முகையதீன் சிஷ்தி அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம்(மக்பரா)ஆகும்.[1]இது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அஜ்மீர் ஊரில் அமைந்துள்ளதால் இது அஜ்மீர் தர்கா என அழைக்கப்படுகிறது. அஜ்மீர் தர்காவில் வருடந்தோறும் புகழ் பெற்ற உருஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா நடைபெறும்.[2].

தர்கா[தொகு]

1893 ல் அஜ்மீர் தர்கா

தர்காவின் பிரதான வாயில் நிஜாம் வாயில் ஆகும்.இது முகலாயப் பேரரசர் ஷாஜகான் கட்டிய ஷாஜகானின் வாயிலை தொடர்ந்து உள்ளது.இதையொட்டி சுல்தான் முகமது கில்ஜி உருவாக்கிய புலந்தர்வாசா எனும் பெரிய வாயில் உள்ளது.அவர் புலந்தர்வாசா எனும் பெரிய வாயிலின் மீது நினைவு சடங்குகள் தொடக்கத்தைக் குறிக்கும் விதமாக , உருஸ் கொடியை ஏற்றினர்.[3].

உருஸ் சந்தனக்கூடு விழா[தொகு]

முகையதீன் சிஷ்தி அடக்கத்தலம்

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் ஏழாவது மாதமான ரஜப் மாதம் 6 மற்றும் 7 தேதிகளில் இங்கு உருஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா நடைபெறும்.[4]

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு சம்பவம்[தொகு]

அஜ்மீர் தர்காவில் 2007ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தேறியது. ரம்ஜான் நோன்பு திறக்கும் நேரத்தில் மக்கள் கூடியிருந்த வேளையில் நடைபெற்ற பயங்கரமான குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.[5][6]

விசாரணை[தொகு]

இந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை தொடங்கிய போலீசார் அம்மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் விசாரணையை ஒப்படைத்தது. அதன் பின்னர், வழக்கு தேசியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.[7]

தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் 149 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது. மேலும் அரசு தரப்பில் 451 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இறுதியில் சிறப்பு நீதிபதி தினேஷ் குப்தா 500 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கினார்.[5][6][7]

குற்றவாளிகள்[தொகு]

இந்த வழக்கில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் என்ற இந்து அமைப்பில் முன்பிருந்த பவேஷ் பட்டேல் மற்றும் தேவேந்திர குப்தா ஆகிய இருவருக்கும் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது. [8][5][6][7]

வெளி இணைப்பு[தொகு]

அஜ்மீர் தர்கா இணையதளம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்மீர்_தர்கா&oldid=2971060" இருந்து மீள்விக்கப்பட்டது