உள்ளடக்கத்துக்குச் செல்

பில்வாரா

ஆள்கூறுகள்: 25°21′N 74°38′E / 25.35°N 74.63°E / 25.35; 74.63
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பில்வாரா
நகரம்
பில்வாரா is located in இராசத்தான்
பில்வாரா
பில்வாரா
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா நகரத்தின் அமைவிடம்
பில்வாரா is located in இந்தியா
பில்வாரா
பில்வாரா
பில்வாரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°21′N 74°38′E / 25.35°N 74.63°E / 25.35; 74.63
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்பில்வாரா
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பில்வாரா நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்69 km2 (27 sq mi)
 • பரப்பளவு தரவரிசை7
ஏற்றம்
421 m (1,381 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்3,59,483
 • அடர்த்தி5,200/km2 (13,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
 • வட்டார மொழிகள்மேவாரி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
311001
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:IN
வாகனப் பதிவுRJ-06
பாலின விகிதம்1000/922 /
இணையதளம்bhilwara.rajasthan.gov.in

பில்வாரா (Bhilwara), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா மாவட்டம் மற்றும் பில்வாரா தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரத்தில் ஜவுளி அதிகம் உற்பத்தி ஆவதால், இதனை இராஜஸ்தானின் ஜவுளி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.[3]இந்நகரம் ஜெய்ப்பூருக்கு தெற்கே 245 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 74,184 குடியிருப்புகளும், 50 வார்டுகளும் கொண்ட பில்வாரா நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 3,59,483 ஆகும். அதில் ஆண்கள் 1,87,081 a மற்றும் 1,72,402 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 922 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 82.2% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 47,692 மற்றும் 4,488 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 285,798 (79.5%), இசுலாமியர் 51,144 (14.23%), சமணர்கள் 19,675 (5.47%), சீக்கியர்கள் 1,200 (0.33%), கிறித்தவர்கள் 1,197 (0.33%), மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.[4]

பொருளாதாரம்

[தொகு]

பில்வாரா நகரத்தின் ஜவுளித் தொழில் புகழ்பெற்றது. எனவே இந்நகரத்தை இராஜஸ்தானின் ஜவுளி தலைநகரம் என அழைப்பர்.

போக்குவரத்து

[தொகு]

சாலைப் போக்குவரத்து

[தொகு]

தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் கீழ் வரும் தேசிய நெடுஞ்சாலை எண் 79 மற்றும் நெடுஞ்சாலை எண் 758 பில்வாரா நகரம் வழியாக செல்கிறது.

பில்வாரா தொடருந்து நிலையம், நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.[5]

தட்ப வெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், பில்வாரா (1981–2010, அதிகபட்சம் 1962–2005)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32.0
(89.6)
36.7
(98.1)
41.2
(106.2)
44.8
(112.6)
47.8
(118)
47.0
(116.6)
42.5
(108.5)
39.2
(102.6)
40.5
(104.9)
41.5
(106.7)
36.0
(96.8)
33.3
(91.9)
47.8
(118)
உயர் சராசரி °C (°F) 23.7
(74.7)
27.1
(80.8)
33.2
(91.8)
38.0
(100.4)
41.3
(106.3)
40.2
(104.4)
33.9
(93)
31.2
(88.2)
32.9
(91.2)
34.2
(93.6)
30.2
(86.4)
25.2
(77.4)
32.6
(90.7)
தாழ் சராசரி °C (°F) 7.2
(45)
9.3
(48.7)
15.7
(60.3)
20.9
(69.6)
25.3
(77.5)
26.3
(79.3)
24.1
(75.4)
22.7
(72.9)
22.0
(71.6)
17.7
(63.9)
12.2
(54)
8.2
(46.8)
17.6
(63.7)
பதியப்பட்ட தாழ் °C (°F) -0.3
(31.5)
1.7
(35.1)
6.3
(43.3)
11.8
(53.2)
16.9
(62.4)
16.5
(61.7)
15.0
(59)
16.0
(60.8)
15.5
(59.9)
10.0
(50)
5.0
(41)
0.9
(33.6)
−0.3
(31.5)
மழைப்பொழிவுmm (inches) 5.7
(0.224)
2.2
(0.087)
3.9
(0.154)
7.0
(0.276)
13.4
(0.528)
41.6
(1.638)
208.3
(8.201)
232.1
(9.138)
55.7
(2.193)
10.5
(0.413)
6.5
(0.256)
1.6
(0.063)
588.6
(23.173)
ஈரப்பதம் 70 60 56 50 49 60 77 82 77 62 64 69 65
சராசரி மழை நாட்கள் 0.4 0.2 0.1 0.5 1.3 2.8 7.9 8.9 3.4 0.7 0.3 0.2 26.8
ஆதாரம்: India Meteorological Department[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Bhilwara City" (PDF).
  2. Bhilwara-Rajasthan. "Location & Area". bhilwara.rajasthan.gov.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-17.
  3. "Iranians spontaneously created 'walls of kindness' to help the homeless". BBC Trending. BBC (BBC UK) (What's popular and why). 20 December 2015. https://www.bbc.com/news/blogs-trending-35132157. 
  4. Bhilwara Population, Religion, Caste, Working Data Bhilwara, Rajasthan - Census 2011[தொடர்பிழந்த இணைப்பு]
  5. https://indiarailinfo.com/arrivals/bhilwara-bhl/307 Bhilwara Railway Staion]
  6. "Station: Bhilwara Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 133–134. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 20 January 2021.
  7. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M176. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 20 January 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்வாரா&oldid=3590210" இலிருந்து மீள்விக்கப்பட்டது