பான்ஸ்வாரா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராஜஸ்தான் மாநிலத்தில் பன்ஸ்வாரா மாவட்டத்தின் அமைவிடம்

பான்ஸ்வாரா மாவட்டம் (Banswara District) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பான்ஸ்வாரா ஆகும். இராஜஸ்தான் மாநிலத்தினின் தெற்குப் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் உதய்பூர் கோட்டத்தில் உள்ளது.

அமைவிடம்[தொகு]

4,522 சதுர பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் வடக்கில் உதய்பூர் மாவட்டம், வடகிழக்கில் பிரதாப்கர் மாவட்டம், கிழக்கிலும், தென்கிழக்கிலும் மத்தியப் பிரதேசம், தென்மேற்கில் குஜராத் மாநிலம், மேற்கில் டூங்கார்பூர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டது

வரலாறு[தொகு]

பன்ஸ்வாரா எனும் சுதேச சமஸ்தானத்தின் பெயரில் இம்மாவட்டத்தை அழைப்பர். பன்ஸ்-வாரா எனில் மூங்கில் காடு எனப்பொருள். இப்பகுதியில் அடர்ந்த மூங்கில் காடுகள் கொண்டதால் இப்பகுதிக்கு பன்ஸ்வாரா எனப்பெயராயிற்று.

பொருளாதாரம்[தொகு]

இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றாக இம்மாவட்டத்தையும் 2006-ஆம் ஆண்டில் இந்திய அரசு அறிவித்துள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊராக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்குகிறது. [1]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

பன்ஸ்வாரா மாவட்டம், மூன்று உட்கோட்டங்களையும்; பன்ஸ்வரா, கார்கி பன்ஸ்வாரா, காடோல், குசால்காட், பாகிதோரா என ஐந்து வருவாய் வட்டங்களையும், தல்வாரா, கார்கி, காடோல், பீபல் குண்ட், பாகிதோரா, அனந்தபுரி, குசால்காட் மற்றும் சஜ்ஜன்காட் என எட்டு ஊராட்சி ஒன்றியங்களையும்; குசால்காட், தன்பூர், காடோல், பன்ஸ்வாரா மற்றுஇம் பாகிதோரா என ஐந்து சட்டமன்ற தொகுதிகளையும் கொண்டுள்ளது.[2]

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,797,485 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 92.92% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 7.10% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி 26.53%% விகிதம் ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 907,754 ஆண்களும்; 889,731 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 980 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 4,522 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 397 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 56.33% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 69.48% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 43.06% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 325,283 ஆக உள்ளது. [3]

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,701,234 (94.65 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 48,834 (2.72 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 22,613 (1.26 %)ஆகவும்; கிறித்தவ, மக்கள் தொகை 22,250 (1.24 % ) சீக்கிய சமய, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.

மொழிகள்[தொகு]

இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, வாக்ரி, போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
  2. CEO, Rajasthan website - district & assembly constituency wise electorates
  3. Banswara District : Census 2011 data

வெளி இணைப்புகள்[தொகு]



ஆள்கூற்று: 27°12′N 74°00′E / 27.200°N 74.000°E / 27.200; 74.000

"https://ta.wikipedia.org/w/index.php?title=பான்ஸ்வாரா_மாவட்டம்&oldid=2055347" இருந்து மீள்விக்கப்பட்டது