ஏரி அரண்மனை
ஏரி அரண்மனை (Lake Palace) என்றழைக்கப்படும் இந்த அரண்மனை முன்னதாக ‘ஜஹ் நிவாஸ்’ என்றழைக்கப்பட்டது. இந்தியாவின் உதய்ப்பூரில் உள்ள பிசோலா ஏரியின் நான்கு ஏக்கரில் அமைந்துள்ளது. இது 83 அறைகளைக் கொண்ட ஆடம்பர ஓட்டலாக அமைந்துள்ளது.[1] நகரத்தில் உள்ள விடுதியில் இருந்து இங்கு வருவதற்கு வசதியாக வேகப்படகு வசதி உள்ளது. உலகளவிலும், இந்திய அளவிலும் கவர்ச்சிகரமான விடுதிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது.
வரலாறு
[தொகு]இது 1743–1746 ஆம் ஆண்டுகளில், மகாராணா இரண்டாம் ஜகத் சிங்கின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டது.[1] கோடைக்காலத்தில் தங்குவதற்கான சிறந்த அரண்மனையாக கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஜகநிவாஸ், ஜான் நிவாஸ் என்று கட்டியவரின் பெயரில் அழைக்கப்பட்டது.
இங்கு தங்குபவர்கள் சூரிய வணக்கம் செய்வதற்காக கிழக்குப்புறம் பார்த்து அரண்மனையைக் கட்டியுள்ளனர்.[2] இது பிற்கால அரசர்களின் கோடைக்கால உல்லாசப் போக்கிடமாக இருந்தது. அரண்மனையின் மேற்புற அறை 21 அடி விட்டத்துடன் (6.4 மீட்டர்) கூடிய வட்ட வடிவில் அமைந்துள்ளது. இதன் தரைப்பகுதியில் கருப்பு, வெள்ளை மார்பிள் கற்களை பதித்துள்ளனர். மேலும் சுவர்களும் பலவித வண்ணங்களுடன் கூடிய அழகான வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.[2]
1857 ஆம் ஆண்டில் இந்தியாவில் சிப்பாய்க் கலகம் ஏற்பட்டபோது பல ஐரோப்பிய குடும்பங்கள் இங்கு வந்து மகாராணா சுவரூப் சிங்கிடம் தஞ்சம் அடைந்தனர். கலகம் செய்பவர்களிடம் இருந்து வந்திருப்பவர்களைக் காப்பாற்ற ராணா அனைத்து நகரபடகுகளையும் அழித்தார், அப்போது தான் யாரும் நகரத்தில் இருந்து அங்கு வர முடியாது என அவர் நம்பினார்.[2]
இதை உதய்பூரின் முதல் ஆடம்பர ஹோட்டலாக்க வேண்டுமென பாக்வத் சிங் முடிவு செய்து, அமெரிக்காவின் டிடி எனும் கலை வல்லுநரின் உதவியினை நாடினார். அவர் 1961–1969 வரை செய்த வேலையின் பயனால் இந்த அரண்மனை ஆடம்பர ஹோட்டலாக எழுச்சி பெற்றது.
1971 ஆம் ஆண்டில் தாஜ் ஹோட்டல்ஸ் அண்ட் பேலஸஸ் இதன் மேலாண்மையினைக் கைப்பற்றியது,[3] அத்துடன் 75 அறைகளை புதிதாக இணைத்தது.[4] தாஜ் குழுமத்தின் ஜாம்செத் டி.எஃப்.லாம், இதனை உண்மையான தோற்றத்திலிருந்து மாற்றியதில் முக்கியமானவர் ஆவார். அவர் இந்த ஹோட்டலினை தனது பணியாலும், அனுபவத்தினாலும் உயர்ந்த தரத்திற்கு கொண்டு சென்றார். இதன் முதல் பொது மேலாளராக பணியாற்றிய அவர், இந்தியாவில் இளம்வயதில் மேலாளர் ஆனவர் என்று கருதுகின்றனர். 2000 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக புதுப்பிப்பு வேலைகள் நடைபெற்றது.
இதர செய்திகள்
[தொகு]பாரம்பரியமும், ஆடம்பரமும் நிறைந்த இந்த ஹோட்டல் உலகின் பல முக்கிய புள்ளிகளின் கவனத்தினை ஈர்த்தது. அவர்களுள் சிலர்: லார்ட் கர்சன், விவியன் லீ, ராணி எலிசபெத், ஈரான் ஷா, நேபாள அரசர், ஜாக்குலின் கென்னடி.
இதன் அழகான தோற்றம் பல திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கும் பயன்படுத்தப்பட்டது. அவற்றுள் சில:
- 1959 – ‘த இந்தியன் டம்ப்’, ‘ஃப்ரிட்ஸ் லாங்க் த டைகர் ஆஃப் எஷனபபூர்’ என்ற இரண்டு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இங்கு நடத்தப்பட்டது.
- 1983 – ‘ஆக்டோபுசி’ எனப்படும் ஜேம்ஸ் பாண்டு திரைப்படம் இங்கும் உதய்பூரின் நகர்ப்பகுதியிலும் எடுக்கப்பட்டன.
- 1984 – ‘த ஜுவல் இன் த கிரவுன்’ எனப்படும் பிரிட்டன் தொலைக்காட்சித் தொடர் எடுக்கப்பட்டது.
- 2001 – சுபாஷ் காயால் படமாக்காப்பட்ட பாலிவுட் படமான ‘யாதேயின்’ இங்குதான் படமாக்கப்பட்டது.
- 2006 – தர்சேம் சிங்கால் எடுக்கப்பட்ட ‘த ஃபால்’ இங்கு படமாக்கப்பட்டது.
- 2013 – ‘யே ஜவானி ஹை திவானி’யும் இங்கு எடுக்கப்பெற்றது.
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Taj Lake Palace,Udaipur". Taj Hotels. Archived from the original on 2011-08-24. பார்க்கப்பட்ட நாள் 2010-07-28.
- ↑ 2.0 2.1 2.2 "Jag Niwas Lake Palace,Jag Niwas Palace in Udaipur India,Lake Palace Udaipur Rajasthan". Indiasite.com. Archived from the original on 2012-09-16. பார்க்கப்பட்ட நாள் 2010-07-28.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Warren, Page 60.
- ↑ "Retrieved 14 April 2008". Archived from the original on 9 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகஸ்ட் 2014.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)