உள்ளடக்கத்துக்குச் செல்

ஜக் மந்திர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜக் மந்திர் அல்லது ஏரி தோட்ட அரண்மனை
ஜக் மந்திர் அரண்மனையின் காட்சி
ஜக் மந்திர் is located in இராசத்தான்
ஜக் மந்திர்
இராசத்தான் இல் அமைவிடம்
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிராஜபுதின மற்றும் முகலாய கட்டடக் கலையின் கலவை
நகரம்உதய்ப்பூர்
நாடுஇந்தியா
கட்டுமான ஆரம்பம்1515
நிறைவுற்றது17வது நூற்றாண்டின் நடுவில்
கட்டுவித்தவர்மகாராணா ஜகத் சிங் I
தொழில்நுட்ப விபரங்கள்
அமைப்பு முறைமஞ்சள் மணற்கல் மற்றும் மார்பிள்

ஜக் மந்திர் ஆனது பிசோலா ஏரியில் உள்ள தீவில் கட்டப்பட்டுள்ள அரண்மனை. இது ஏரி தோட்ட அரண்மனை (Lake Garden Palace) எனவும் அழைக்கப்படுகிறது. இது இந்திய மாநிலமான ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் அமைந்துள்ளது. இதைக் கட்டியவர்கள் மேவார் ராச்சியத்தின் மூன்று மகாராணாக்களாகிய சிசோடியா ராஜபுதின மன்னர்கள். இந்த அரண்மனையின் கட்டுமானம் 1551ல் மகாராணா அமர் சிங் ஆரம்பித்தார். பின்னர் மகாராணா கரன் சிங் (1620–1628) தொடர்ந்து கட்டினார், இறுதியில் மகாராணா ஜகத் சிங் I (1628–1652) கட்டி முடித்தார். முந்தைய மகாராணா ஜகத் சிங்கை கவுரவிக்கும் விதமாக ஜகத் மந்திர் என பெயரிடப்பட்டது. இவ்வரண்மனையை மன்னர் குடும்பத்தினர் கோடை வாசத்தலமாகவும், விருந்து கொடுக்கவல்ல சொகுசு அரண்மனையாகவும் பயன்படுத்தினர்.[1][2][3][4][5][6]இந்த அரண்மனை இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் புகலிடம் கோருவோருக்கு அடைக்கலம் அளித்துள்ளது.[1][7]

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Jag Mandir". Eternal Mewar: Mewar Encyclopedia. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-12-16.
  2. "Palace of Jugmundur in Oodipoor Lake". British Library Online Gallery. பார்க்கப்பட்ட நாள் 2009-12-16.
  3. "Jag Mandir Palace". பார்க்கப்பட்ட நாள் 2009-12-16.
  4. Gajrani, S (2004). India - A Travel Guide. Gyan Publishing House. p. 265. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 818205060X. பார்க்கப்பட்ட நாள் 2009-12-16. {{cite book}}: |work= ignored (help)
  5. KIshore, Dr.B.R. India - A Travel Guide. Diamond Pocket Books (P) Ltd. p. 466. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8128400673. பார்க்கப்பட்ட நாள் 2009-12-16. {{cite book}}: |work= ignored (help); Unknown parameter |coauthor= ignored (help)
  6. "Jagmandir Palace, Udaipur". பார்க்கப்பட்ட நாள் 2009-12-16.
  7. Bradnock, Robert (2001). Rajasthan & Gujarat Handbook: The Travel Guide. Footprint Travel Guides. p. 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 190094992X. {{cite book}}: |work= ignored (help); Unknown parameter |coauthor= ignored (help)
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jag Mandir Palace
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்_மந்திர்&oldid=3572817" இலிருந்து மீள்விக்கப்பட்டது