பட்லா சூரிய மின் ஆற்றல் பூங்கா

ஆள்கூறுகள்: 27°32′23″N 71°54′55″E / 27.5396685°N 71.9152528°E / 27.5396685; 71.9152528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்லா சூரிய மின் ஆற்றல் பூங்கா
பட்லா சூரிய மின் ஆற்றல் பூங்கா
நாடுஇந்தியா
அமைவு27°32′23″N 71°54′55″E / 27.5396685°N 71.9152528°E / 27.5396685; 71.9152528
நிலைOperational
இயங்கத் துவங்கிய தேதி20 மார்ச் 2020
அமைப்புச் செலவு10,000 கோடி (US$1.3 பில்லியன்)
இணையதளம்
https://ntpcrel.co.in/

பட்லா சூரிய மின் ஆற்றல் பூங்கா (Bhadla Solar Park), மேற்கு இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தில் உள்ள ஜோத்பூர் மாவட்டத்தில் பட்லா எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. உலகின் பெரிய படலா சூரிய சக்தி பூங்காவின் பரப்பளவு 5,700 எக்டேர்கள் (14,000 ஏக்கர்கள்) ஆகும். இது நாள் ஒன்றுக்கு 2245 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.[1]

அமைவிடம்[தொகு]

இராஜஸ்தான மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தில் அமைந்த ஜோத்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான ஜோத்பூர் நகரத்திற்கு வடமேற்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் பலோதி வட்டத்தில் உள்ள பட்லா கிராமத்தில் 45 km2 (17 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு வெப்பம் 46 மற்றும் 51 °C (115 மற்றும் 124 °F) வரையிலும், புழுதிப் புயலும் வீசும்.[2]

Development of Bhadla Solar Park documented on satellite Sentinel-2 imagery

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "With 2,245 MW of Commissioned Solar Projects, World's Largest Solar Park is Now at Bhadl". 20 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Catching the sun at Bhadla solar park". The Indian Express. 18 June 2017. 1 December 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 18 November 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]