பாலி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


இராஜஸ்தான் மாநிலத்தில் பாலி மாவட்டத்தின் அமைவிடம்
பாலி மாவட்டம்
पाली जिल्लौ
district
நாடுஇந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்பாலி
பரப்பளவு
 • மொத்தம்12,387 km2 (4,783 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,037,573
 • அடர்த்தி164/km2 (420/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி, மார்வாரி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்306401
தொலைபேசி குறியீட்டெண்02932
வாகனப் பதிவுRJ-22
எழுத்தறிவு63.23%
மக்களைவத் தொகுதிபாலி
சராசரி ஆண்டு மழைப் பொழிவு22.5 °C (72.5 °F)
சராசரி கோடைகால வெப்ப நிலை45 °C (113 °F)
சராசரி குளிர்கால வெப்பநிலை00 °C (32 °F)
இணையதளம்pali.rajasthan.gov.in

பாலி மாவட்டம் (Pali District) இந்தி:पाली ज़िला) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பாலி ஆகும்.

இராஜஸ்தான் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் ஜோத்பூர் கோட்டத்தில் உள்ளது.

இம்மாவட்டத்தில் ராசபுத்திரர்கள் அதிகம் கொண்ட மாவட்டமாகும். [1][2][3][4]

மாவட்ட அமைவிடம்[தொகு]

இம்மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஆரவல்லி மலைத்தொடர் உள்ளது. லூனி ஆறு இம்மாவட்டத்தில் பாய்கிறது. இம்மாவட்டத்தின் வடக்கில் நாகவுர் மாவட்டம், வடகிழக்கில் அஜ்மீர் மாவட்டம், கிழக்கில் ராஜ்சமந்து மாவட்டம், தென்கிழக்கில் உதய்பூர் மாவட்டம், தென்மேற்கில் சிரோஹி மாவட்டம், மேற்கில் ஜாலாவார் மாவட்டம் மற்றும் பார்மேர் மாவட்டம், வடமேற்கில் ஜோத்பூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் சோஜாத், மார்வார் சந்திப்பு, ஜெய்த்தரன், ராய்ப்பூர், சுமேர்பூர், பலி, ரோகத் மற்றும் தேசூரி என ஒன்பது வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் ஊரக வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற ராய்ப்பூர், பாலி, தெசூரி, பலி, ராணி, சோஜாத், ஜெய்த்திரன், மார்வார் சந்திப்பு, சுமேர்பூர் மற்றும் ரோகத் என பத்து ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் 1012 கிராமங்களும்; 320 ஊராட்சி மன்றங்களயும் கொண்டுள்ளது. இங்கு சோஜத், ஜெய்த்தரன், சுமேர்பூர், சத்ரி, பாலி, பால்னா, தகாத்காட் மற்றும் ராணி எட்டு நகராட்சி மன்றங்களையும்; பலி எனப்படும் நகரப் பஞ்சாயத்து மன்றமும் உள்ளது.

அரசியல்[தொகு]

பாலி மாவட்டம் சோஜாத், சுமேர்பூர், பாலி, மார்வார் சந்திப்பு, ஜெய்த்திரன் என ஆறு சட்டமன்றத் தொகுதிகளையும்; பாலி மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,037,573 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 77.42% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 22.58% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி 11.94% விகிதம் ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,025,422 ஆண்களும்; 1,012,151 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 987 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 12,387 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 164 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 62.39% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 76.81% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 48.01% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 297,434 ஆக உள்ளது. [5]

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,870,543 (91.80 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 143,476 (7.04 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 18,974 (0.93 %) ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 1,540 (0.08 %) ஆகவும்; கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.

மொழிகள்[தொகு]

இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.theweekendleader.com/Causes/1289/ready-for-challenge.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-02-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-04-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-04-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-04-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. http://rajput.askdefinebeta.com
  5. Pali District : Census 2011 data

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 25°46′N 73°19′E / 25.767°N 73.317°E / 25.767; 73.317

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலி_மாவட்டம்&oldid=3385491" இருந்து மீள்விக்கப்பட்டது