ஷிவ் நிவாஸ் பேலஸ்

சிவ நிவாஸ் பேலஸ் என்பது முற்கால ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்ப்பூரினை ஆண்ட மகாராஜாவின் இருப்பிடம் ஆகும். இது பிச்சோழா எனும் ஏரியின் கரையில் அமைந்துள்ளது [1].
விருந்தினர் அறை
[தொகு]இந்த விருந்தினர் அறை நகர அரண்மனைக்கான கட்டிடத்திற்கு தென்பகுதியில் அமைந்துள்ளது. இந்த அறையின் வேலைப்பாடுகள் மகாராஜா சஜ்ஜன் ஷாம்பு சிங்க் (1874 - 1884) என்பவரால் தொடங்கப்பட்டு, அவருக்கு அடுத்த மகாராஜாவான ஃபாடேஹ் சிங்க் என்பவரால் கட்டிமுடிக்கப்பட்டது. இது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது.
அந்த காலகட்டத்தில் முக்கிய பிரமுகர்களாக இருந்தவர்கள், பிரபலங்கள் இங்கு தங்கினர். இதில் முக்கியமாக லண்டனின் ஐந்தாம் ஜார்ஜ் ஒருவர் ஆவார். இவர் 1905 ஆம் ஆண்டில் இங்கு தங்கினார். எட்வார்ட் எனும் வேல்ஸின் இளவரசர் இங்கு தங்கியுள்ளார்.
இதன் பின்னர் 1955 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அரியணையேறிய பாக்வாத் சிங்க் உயர்தர குடும்பங்களுக்கு தங்குவதற்கு இடமளிப்பதில் சற்று பொருளாதார ரீதியான சிக்கல்களை மேற்கொண்டார். இதனால் அவ்விடத்தினை வருமானம் ஈட்டும் பகுதியாக மாற்ற முற்பட்டார். அதன் விளைவாக அவ்விடத்தினை ஷிவ் நிவாஸ் மற்றும் சிறிய ஃபாடேஹ் பிரகாஷ் பேலஸ் என்று மதிப்புமிக்க விலையுயர்ந்த ஹோட்டலாக மாற்றினார். அடுத்த நான்கு ஆண்டுகள் கழித்து இவ்விடம், ஷிவ் நிவாஸ் பேலஸ் என்ற பெயருடன் 1982 இல் திறக்கப்பட்டது.
ஹோட்டல் அறைகள்
[தொகு]ஹோட்டல் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு ஒரு அரைவட்ட வடிவ உட்புற முற்றமாக அமைந்து, அதன் மையத்தில் பளிங்கினால் ஆன நீச்சல் குளம் அமைந்துள்ளது. மாடிப்புற அறைகள் மற்றும் பால்கனி சார்ந்த அறைகள் மூலம் தெற்குப் பகுதியில் அமைந்து தோட்டம் மற்றும் பிச்சோழா ஏரியின் அழகினைக் காண இயலும், அத்துடன் மேற்குப் பகுதியில் ஜாஹ் மந்திர் மற்றும் லேக் பேலஸ் ஆகியவற்றின் அழகினையும் ரசிக்கலாம். இந்த ஹோட்டல் பழங்கால ராஜ்புட் கட்டிடக்கலையினைச் சேர்ந்தது. இந்த ஹோட்டலைக் கட்டுவதற்கு முன்பு காஜா உஸ்டஹ் மற்றும் குந்தன் லால் என்பவர்கள் மகாராஜாவினால் இங்கிலாந்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு, அவர்கள் கண்ணாடி மொசைக் வடிவமைப்பு மற்றும் ஃபெரெஸ்கோ வண்ணம் தீட்டுதலை கற்றுவந்து அதனை ஹோட்டலின் வடிவமைப்பில் பயன்படுத்தினர். [2]
முதலில் கட்டும்போது ஹோட்டலில் 9 சூட்கள் இருந்தன. அவையனைத்தும் கீழ்ப்புற அடுக்கில் இருந்தன. பின்னர் புதுப்பிக்கும்போது இரண்டாவது அடுக்கில் 8 கட்டிடங்கள் புதிதாக இணைக்கப்பட்டன. இதன் மூலம் 36 விருந்தினர் அறைகள் புதிதாக உருவானது. [3]
இருப்பிடம்
[தொகு]சிட்டி பேலஸ் காம்ப்ளக்ஸ் எனும் பகுதியில் மிக உயர்ந்த கட்டிடமாக ஷிவ் நிவாஸ் பேலஸ் காட்சியளிக்கிறது. இதற்கு அருகே பிச்சோழா ஏரி சுமார் 600 மீட்டர் தொலைவிலும், ஃபாடேஹ் சாகர் ஏரி சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜாக் மந்திர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும், மான்சூன் பேலஸ் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜக்திஷ் கோவில் சுமார் 600 மீட்டர் தொலைவிலும், சாஹேய்லியான் கி பாரி சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலும் மற்றும் அரசு அருங்காட்சியகம் சுமார் 100 மீட்டர் தொலைவிலும், குலாப் பாஹ் மற்றும் விலங்கியல் பூங்கா சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
போக்குவரத்து வசதிகள்
[தொகு]ஷிவ் நிவாஸ் பேலஸில் இருந்து அருகில் அமைந்துள்ள போக்குவரத்து வசதிகள் பின்வருமாறு: மகாராஜா பிரதாப் விமான நிலையம் – 28 கிலோ மீட்டர் (தோராயமாக) ராணா பிரதாப் நாகர் ரயில் நிலையம் – 7 கிலோ மீட்டர் (தோராயமாக) நகர ரயில் நிலையம் – 2 கிலோ மீட்டர் (தோராயமாக) மாநில போக்குவரத்து பேருந்து நிலையம் – 3 கிலோ மீட்டர் (தோராயமாக)
ஷிவ் நிவாஸ் பேலஸ் வசதிகள்
[தொகு]உணவு மற்றும் குடிபானங்கள்
[தொகு]குளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், சேர்ந்திருக்கும் அறைகள், கதவு திறந்துவிடுபவர், விரைவாக பதிவிடுதல் மற்றும் அறைச் சேவை போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.
வணிகச் சேவைகள்

இதர வசதிகள்

மறு உருவாக்கம்

பயணச் சேவைகள்

தனிப்பட்ட சேவைகள்

மேற்கோள்கள்
[தொகு]- ↑ "History of Shiv Niwas Palace,Udaipur". Retrieved 2015-08-18.
- ↑ "Shiv Niwas palace Rooms". cleartrip.com. Retrieved 2015-08-18.
- ↑ "Shiv Niwas Palace,Udaipur". Archived from the original on 2015-08-14. Retrieved 2015-08-18.