ஓம் பிர்லா
ஓம் பிர்லா | |
---|---|
![]() | |
இந்திய மக்களவைத் தலைவர் பதினேழாவது மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 19 சூன் 2019 | |
முன்னவர் | சுமித்ரா மகாஜன் |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 16 மே 2014 | |
முன்னவர் | ஜெயராஜ் சிங் |
தொகுதி | கோட்டா மக்களவைத் தொகுதி, இராஜஸ்தான் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஓம் பிர்லா 23 நவம்பர் 1962 கோட்டா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | அமிதா பிர்லா |
இருப்பிடம் | கோட்டா, இராஜஸ்தான் |
பணி | அரசியல்வாதி |
சமயம் | இந்து சமயம் |
ஓம் பிர்லா (Om Birla) (பிறப்பு: 23 நவம்பர் 1962), பாரதிய ஜனதா கட்சியின் இராஜஸ்தான் மாநில அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2014-இல் கோட்டா மக்களவைத் தொகுதியிலிருந்து பதினாறாவது மக்களவைக்கும் மற்றும் 2019-இல் பதினேழாவது மக்களவைக்கும் தொடர்ந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
மக்களவைத் தலைவராக[தொகு]
இவர் 19 மே 2019 அன்று பதினேழாவது மக்களவையின் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் கோட்டா தெற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து மூன்று முறை, இராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.