கோட்டா, இராசத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோட்டா

कोटा

—  நகரம்  —
கோட்டா
இருப்பிடம்: கோட்டா
, இராச்சசுத்தான்
அமைவிடம் 25°11′N 75°50′E / 25.18°N 75.83°E / 25.18; 75.83ஆள்கூற்று : 25°11′N 75°50′E / 25.18°N 75.83°E / 25.18; 75.83
நாடு  இந்தியா
மாநிலம் இராச்சசுத்தான்
மாவட்டம் கோட்டா
ஆளுநர் கல்யாண்சிங்
முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா
மக்களவைத் தொகுதி கோட்டா
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/இராச்சசுத்தான்/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/இராச்சசுத்தான்/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/இராச்சசுத்தான்/உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை

அடர்த்தி

9,96,899 (2001)

288/km2 (746/sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


271 மீற்றர்கள் (889 ft)

இணையதளம் kota.nic.in


கோட்டா (Kota, இந்தி: कोटा), இந்தியாவின் வட மாநிலம் இராசத்தானில் உள்ள ஓர் நகரமாகும். மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து தெற்கே 240 கிலோமீற்றர்கள் (149 mi) தொலைவில் சம்பல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சுற்றுப்புறத்தில் பயிராகும் கம்பு, கோதுமை, நெல், தானியங்கள், கொத்தமல்லி மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு சந்தையாக இந்நகரம் விளங்குகிறது. எண்ணெய் ஆலைகள், பருத்தி ஆலைகள், கைத்தறிகள், உலோக கைவினைப்பொருட்கள் ஆகியன பாரம்பர்ய தொழில்களாகும். பருத்தி சேலைகளில் கோட்டா வகை சேலைகள் தனித்துவம் பெற்றவை. அண்மையில் வேதி உரங்கள், வேதித் தொழிலகங்கள் மற்றும் பொறியியல் தொழிற்சாலைகள் வளர்ந்து வருகின்றன. இராசத்தானின் மூன்று பெரிய நகரங்களில் ஒன்றாக உள்ளது; மற்றவை ஜெய்ப்பூரும் ஜோத்பூரும் ஆகும்.

அண்மையில் இங்கு பொறியியல், மருத்துவம் மற்றும் இந்தியத் தொழிற்நுட்பக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் பெருகி புகழ்பெற்றுள்ளன. கோட்டாவின் தனித்துவமிக்க ஓவியப் பாணியும் குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

மேலும் அறிய[தொகு]

  • Tod James Annals and Antiquities of Rajasthan: Or, The Central and Western Rajpoot States of India Published 2001 Asian Educational Services ISBN 81-206-1289-2 pp. 407–690
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டா,_இராசத்தான்&oldid=2057283" இருந்து மீள்விக்கப்பட்டது