ஜுனாகாத் கோட்டை
ஜுனாகாத் கோட்டை | |
---|---|
பிகானேர், இந்தியா | |
![]() | |
கோட்டையின் முகப்பு | |
![]() | |
ஆள்கூறுகள் | 28°01′N 73°19′E / 28.02°N 73.32°E |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | ராஜஸ்தான் அரசு |
மக்கள் அனுமதி |
Yes |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1589-1594 |
கட்டியவர் | கரண் சந்த் (ராஜா ராய் சிங் முன்னிலையில்) |
கட்டிடப் பொருள் |
சிவப்பு மணற்கல் மார்பிள் |
ஜுனாகாத் கோட்டை (Junagarh Fort) இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள பிகானேரில் உள்ளது. இக்கோட்டை முன்னாளில் சிந்தாமணி என்று அழைக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில், இக்கோட்டையில் வாழ்ந்த அரசு குடும்பத்தினர் லால்கட் அரண்மனைக்கு குடிபெயர்ந்த போது, இக்கோட்டைக்கு 'பழைய கோட்டை' என்று பொருள்படும் ஜுனாகாத் என்ற பெயர் ஏற்பட்டது. இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பல கோட்டைகள் மலைமேல் கட்டப்பட்டவை. ஆனால், இக்கோட்டை சமதள நிலப்பரப்பில் கட்டப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போதைய பிகானேர் நகரத்தின் வரலாற்றில் இக்கோட்டை முக்கிய பங்கைப் பெறுகிறது.[1][2][3]
பிகானேரின் ஆறாம் அரசரான ராஜா ராஜ் சிங் அவர்கள் இவ்வூரை 1571 முதல் 1611ஆம் ஆண்டு வரை ஆண்டார். அவரது அமைச்சரான கரண் சிங்கின் மேற்பார்வையில் இக்கோட்டை கட்டப்பட்டது. 1589ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கட்டிட வேலை, 1594ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. தற்போதைய பிகானேர் நகரத்தின் நடுவிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் இக்கட்டிடம் அமைந்துள்ளது. இக்கோட்டையின் இடிபாடுகள் லட்சுமி நாராயணன் கோயிலுக்கருகில் பாதுகாக்கப்படுகின்றன.[1][4][5]
பல முறை பல எதிரிகள் கைப்பற்ற முயன்றும் அவர்களின் ஆளுகைக்குள் இக்கோட்டை வரவில்லை. ஒரே ஒரு நாள் மட்டும் கம்ரான் மிர்சா என்ற மன்னரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இவர் முகலாய மன்னரான பாபரின் இரண்டாவது மகன்.[6]
கிட்டத்தட்ட 5.28 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோட்டைக்குள் அரண்மனையும் கோயிலும் அமைந்துள்ளன.[2] இக்கோட்டை பல்வேறு கட்டிடக்கலை நுணுக்கங்களை உள்ளடக்கியது.[3][7]
புவியியல்
[தொகு]இக்கோட்டை ராஜஸ்தானின் பாலை நிலமான தார் பாலைவனத்தில் அமைந்துள்ளது. இக்கோட்டையின் வடமேற்கில் ஆரவல்லி மலைத்தொடர் சூழ்ந்துள்ளது. இக்கோட்டை அமைந்துள்ள பிகானேரும், ஜெய்சல்மேர், ஜோத்பூர் ஆகிய நகரங்களும் பாலவன நிலத்தில் அமைந்தவை.[3][5][8]
கோயில்கள்
[தொகு]கோட்டைக்குள் ஹரி மந்திர் உள்ளது. இக்கோயில் அரச குடும்பத்தினர் வழிபடுவதற்காகக் கட்டப்பட்டது. இங்கு விஜயதசமியும், கங்கவுர் திருவிழாவும், குடும்ப விழாக்களும் கொண்டாடி இருக்கின்றனர். தசரா விழாவின் போது, போர் ஆயுதங்களும் குதிரைகளும் வழிபடப்படுகின்றன. இக்கோயிலின் மூலவர் லட்சுமி நாராயணர் ஆவார். இங்கு இலட்சுமித் தாயார் உடன் பெருமாள் உறைகிறார்.[9][10]
இங்குள்ள ரத்தன் பேஹரி கோயில் 1846ஆம் ஆண்டில் பிகானேர் அரச குடும்பத்தினரால் கட்டப்பட்டது. நாகர, முகலாய கட்டிடக்கலையின் நுணுக்கங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன. இக்கோயில் மார்பிள் கற்களால் அமைக்கப்பட்டது. இங்கு கிருஷ்ணர் அருள்பாலிக்கிறார்.[11]
அரண்மனைகள்
[தொகு]

கரண் மகால் கரண் சிங் என்பவரால் 1690ஆம் ஆண்டுவாக்கில் கட்டப்பட்டது. முகலாய அரசரான அவுரங்கசீப்பை வெற்றி பெற்றதன் அடையாளமாக இக்கோட்டையைக் கட்டினார். பொது மக்கள் கூடுவதற்காக அமைக்கப்பட்ட இம்மண்டபத்தை ஒட்டி, தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் மாடங்கள் கற்களாலும் மரக்கட்டைகளாலும் வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டன. பின்னர் வந்த அனூப் சிங், சூரத் சிங் போன்ற அரசர்கள் இம்மண்டபத்திற்கு வேலைப்பாடுகளுடன் கூடிய கண்ணாடித்துண்டுகளை அமைத்தனர். இவற்றில் சிவப்பு நிறத்திலும், தங்க நிறத்திலும் பூசப்பட்டன.[9][12][13]
பூல் மகால் இக்கோட்டையின் பழைமையான கட்டிடமாகும். பூ மண்டபம் என்று பொருள்படும் பெயரைக் கொன்டது [14]
அனூப் மகால் என்ற மாடிக் கட்டிடம் அரச குடும்பத்தின் ஆட்சிக் கட்டிடமாக செயல்பட்டது. இங்கு மரத்தால் வேயப்பட்ட தளங்களும், கண்ணாடித் துண்டுகளால் செய்யப்பட்ட வேலைப்பாடுகளும் நிரம்பியுள்ளன. தங்கப் பூச்சு பெற்ற ஓவியங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.[3][12]
சந்திர மகால் இக்கோட்டைக்குள் உள்ள வசதிமிக்க கட்டிடமாகும். இங்குள்ள கடவுள் சிலைகளும் ஓவியங்களும் தங்கப் பூச்சு பெற்றவை. விலைமதிப்பு மிக்க கற்களும் இவற்றில் பதிக்கப்பட்டுள்ளன.[12] அரச குடும்பத்தினரின் படுக்கையறையில் கண்ணாடிகள் உள்ளே வருபவரை காணும்படி அமைக்கப்பட்டுள்ளன.[10]
கங்கா மகால், கங்கா சின் என்பவரால் இருபதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்குள்ள அருங்காட்சியகத்தில் முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட போர்க்கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.[15][16]
பாதல் மகால் அனூப் மகாலுடன் அமைந்துள்ளது. இங்கு அரசருக்கு முக்கியஸ்தர்கள் மரியாதை செலுத்தும் படங்கள் ஓவியங்களாக வரையப்பட்டு உள்ளன. வீரர்களும் அமைச்சர்களும், முக்கியஸ்தர்களும் அணிவகுத்து நிற்கும் படங்களும் இங்குள்ளன.[9] இங்குள்ள சுவர்களில் கிருஷ்ணரும் ராதையும் இருப்பது போன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
அருங்காட்சியகம்
[தொகு]1961ஆம் ஆண்டில் இப்பகுதியின் அரசராய் இருந்த கர்ணி சிங் அவர்களால், கோட்டைக்குள் அருங்காட்சியகம் கட்டப்பட்டது. இக்கோட்டை அரச குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட மகாராஜா ராஇ சிங்ஜி அறக்கட்டளையால் பராமரிக்கப்படுகிறது.[17] இங்கு சமற்கிருதம், பாரசீகம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட சுவடிகளும், ஓவியங்களும், புராதனப் பொருட்களும், கடவுள் சிலைகளும், ஆடைகளும், போர்க் கருவிகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.[15][17][18]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Michell p. 222
- ↑ 2.0 2.1 Ring pp. 129-33
- ↑ 3.0 3.1 3.2 3.3 "History". National Informatics centre, Bikaner district. Archived from the original on 2009-12-12. Retrieved 2009-12-07.
- ↑ "Junagarh Fort:Fort of Interiors". History. Junagarh.org. 2008. Retrieved 2010-02-08.
- ↑ 5.0 5.1 Ring p.129
- ↑ "A fort that was ruled by Yaduvanshis". The Tribune. 2001-01-13. Retrieved 2009-12-09.
- ↑ "Junagarh Fort:Fort of Interiors". Architecture. Junagarh.org. 2008. Retrieved 2010-02-08.
- ↑ "Geography of Rajasthan". Retrieved 2009-12-09.
- ↑ 9.0 9.1 9.2 Ward pp.116-9
- ↑ 10.0 10.1 Stott p. 253
- ↑ "Ratan Behari temple". National Informatics Centre, Bikaner. Archived from the original on 2010-01-03. Retrieved 2009-12-07.
- ↑ 12.0 12.1 12.2 Abram pp. 216-8
- ↑ "Karan Mahal (Public Audience Hall)". Official site of Junagarh Fort. Maharaja Rai Singhji Trust, Bikaner. 2008. Retrieved 14 February 2010.
- ↑ "Phool Mahal". Official site of Junagarh Fort. Maharaja Rai Singhji Trust, Bikaner. 2008. Retrieved 9 February 2010.
- ↑ 15.0 15.1 Bradnock, Robert; Roma Bradnock (2001). Rajasthan & Gujarat Handbook: The Travel Guide. Footprint Travel Guides. p. 233. ISBN 1-900949-92-X. Retrieved 2010-02-08.
- ↑ Abram, David (2003). Rough guide to India. Rough Guides. ISBN 1-84353-089-9.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ 17.0 17.1 "Junagarh Fort:Fort of Interiors". Official site of Junagarh fort. Maharaja Rai Singhji Trust. 2008. Retrieved 2010-02-08.
- ↑ "Junagarh Fort:Fort of Interiors:Armoury". Official site of Junagarh fort. Maharaja Rai Singhji Trust. 2008. Retrieved 2010-02-08.
கூடுதல் சான்றுகள்
[தொகு]- Abram, David (2003). Rough guide to India. Rough Guides. ISBN 1-84353-089-9.
{{cite book}}
:|work=
ignored (help) - Beny, Roland; Matheson, Sylvia A. (1984). Rajasthan - Land of Kings. London: Frederick Muller. ISBN 0-584-95061-6.
- Bradnock, Robert; Roma Bradnock (2001). Rajasthan & Gujarat Handbook: The Travel Guide. Footprint Travel Guides. ISBN 1-900949-92-X.
- Choy, Monique; Sarina Singhh (2002). Rajasthan. Lonely Planet. ISBN 1-74059-363-4.
- Crump, Vivien; Toh, Irene (1996). Rajasthan (hardback). London: Everyman Guides. ISBN 1-85715-887-3.
- Mathur, Laxman Prasad (1989). Forts and strongholds of Rajasthan. Inter-India Publications. ISBN 81-210-0229-X.
- Michell, George; Martinelli, Antonio (2005). The Palaces of Rajasthan. London: Frances Lincoln. ISBN 978-0-7112-2505-3.
{{cite book}}
:|work=
ignored (help) - Ring, Trudy; Robert M. Salkin; Sharon La Boda (1996). International Dictionary of Historic Places: Asia and Oceania. Taylor & Francis. ISBN 1-884964-04-4. Retrieved 2009-12-07.
{{cite book}}
:|work=
ignored (help) - Stott, David (2007). Footprint Rajasthan. Footprint Travel Guides. ISBN 1-906098-07-7. Retrieved 2009-12-07.
{{cite book}}
:|work=
ignored (help) - Tillotson, G.H.R (1987). The Rajput Palaces - The Development of an Architectural Style (Hardback) (First ed.). New Haven and London: Yale University Press. ISBN 0-300-03738-4.
- Ward, Philip (1989). Northern India, Rajasthan, Agra, Delhi: a travel guide. Pelican Publishing Company. ISBN 0-88289-753-5. Retrieved 2009-12-07.
{{cite book}}
:|work=
ignored (help)
வெளி இணைப்புகள்
[தொகு]