சகஸ்ரபாகு கோயில்கள்

ஆள்கூறுகள்: 24°44′10″N 73°43′15″E / 24.73611°N 73.72083°E / 24.73611; 73.72083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகஸ்ர பாகு கோயில்களின் காட்சி

சகஸ்ர பாகு கோயில்கள் (Sahasra Bahu temples) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் உதயபூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான உதயப்பூர் நகரத்திற்கு வடக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நக்டா எனும் ஊரில் விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்து சமயக் கோவில்கள் ஆகும். சகஸ்ர பாகு எனில் ஆயிரம் கைகள் என்று பொருள். [1] மூலவர் கோயிலைச் சுற்றி 10 உப கோயில்கள் அமைந்துள்ளது.[2] 10-ஆம் நூற்றாண்டில் உதய்பூர் இராச்சிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோயில்களின் வடிவமைப்பு மற்றும் வெளிப்புறச் சிற்பங்கள் மாரு-கூர்ஜரக் கட்டிடக்கலை நயத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இக்கோயில்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்கோயிலை பராமரிக்கிறது. நக்டா துவக்கத்தில் உதய்பூர் இராச்சியத்தின் தலைநகராக இருந்தது.

விஷ்ணுவுக்கான கோயில்கள் இவை ஆகும். இவற்றில் இரு பெரிய கோயில்கள் அருகருகே உள்ளன. பத்தடி உயரமான பெரிய அடித்தளம் மேல் இந்தக் கோயில்கள் அனைத்தும் அமைந்துள்ளன. உள்ளூரில் மாமியார் மருமகள் என்ற பொருளில் இக்கோயில்களைச் சொல்கிறார்கள்.

இவை எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. முகலாயர்காலத்தில் இக்கோயில்கள் இடிக்கப்பட்டு மூலவர் சிலை அகற்றப்பட்டது. அதன்பின் அப்படியே கிடந்து வெள்ளையர் காலகட்டத்தில் மீட்கப்பட்டன. இன்று இந்தியாவின் முக்கியமான கலைப்பொக்கிஷங்களாக இவை பாதுகாக்கப்படுகின்றன. இது ஒரு சுற்றுலா தலமாக உள்ளது.[3]

படக்காட்சிகள்[தொகு]

சகஸ்ர பாகு கோயில்களின் சிதிலங்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. Michell "late 10th century", but the ASI board in 2018 said "early 11th century".
  2. Michell
  3. http://www.jeyamohan.in/24721#.WV8l3vl97IV
  • Michell, George (1990), The Penguin Guide to the Monuments of India, Volume 1: Buddhist, Jain, Hindu, p. 287, 1990, Penguin Books, ISBN 0140081445

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சகஸ்ரபாகு_கோயில்கள்&oldid=3600432" இலிருந்து மீள்விக்கப்பட்டது