சரிஸ்கா தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சரிஸ்கா தேசியப் பூங்கா
Deer in Sariska Reserve.jpg
சரிஸ்கா தேசியப் பூங்காவிலுள்ள மான்களுள் ஒன்று
Map showing the location of சரிஸ்கா தேசியப் பூங்கா
Map showing the location of சரிஸ்கா தேசியப் பூங்கா
அமைவிடம்ராஜஸ்தான், இந்தியா
கிட்டிய நகரம்அல்வார்
ஆள்கூறுகள்27°19′3″N 76°26′13″E / 27.31750°N 76.43694°E / 27.31750; 76.43694ஆள்கூறுகள்: 27°19′3″N 76°26′13″E / 27.31750°N 76.43694°E / 27.31750; 76.43694
பரப்பளவு866
நிறுவப்பட்டது1955
நிருவாக அமைப்புபுலிகள் பாதுகாப்புத் திட்டம், ராஜஸ்தான் அரசு

சரிஸ்கா தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Sariska national park) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் . இது முக்கியமான புலிகள் காப்பகம் ஆகும். இது அல்வார் மாவட்டத்தில் 866 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவானது வறண்ட பகுதியில் அமைந்துள்ளது. இங்கு புற்களும் பாறைகளும் நிரம்பிக் காணப்படுகின்றன. 1955 ஆம் ஆண்டு இது வனவிலங்குப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1978 ஆம் ஆண்டில் இந்த தேசியப்பூங்காவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் தேசியப் பூங்காவானது ஜெய்ப்பூர் நகரிலிருந்து 107 கிலோமீட்டர்கள் தொலைவிலும் இந்தியாவின் தலைநகர் தில்லியிலிருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்துள்ளது. 2004 ஆம் ஆண்டின் வனவிலங்குகள் கணக்கெடுப்பின் படி இத்தேசியப் பூங்காவில் புலிகள் எதுவும் இல்லை.[1] பின்னர் பல்வேறு விசாரணைகளுக்குப் பின்னர் அச்செய்தி உறுதி செய்யப்பட்டு, புதிதாக மூன்று புலிகள் விடப்பட்டன.[2] இப்போது அங்கு 7 புலிகள் உள்ளன.[3] வறண்ட வெப்பமண்டலக் காடுகளைக் கொண்ட இச்சரணாலயத்தில் கடமான், புள்ளிமான், காட்டுப்பூனை நரி, கழுதைப்புலி, அனுமன் குரங்கு ரீசசு குரங்கு, நீலப்பசு போன்ற விலங்குகள் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]