இந்திய ரூபாய்க் குறியீடு
₹ | |
---|---|
இந்திய ரூபாய்க் குறியீடு | |
ஒருங்குறியில் | U+20B9 ₹ இந்திய ரூபாய்க் குறியீடு (HTML ₹ ) |
நாணயம் | |
நாணயம் | இந்திய ரூபாய் |
தொடர்புடையது | |
மேலும் பார்க்கவும் | U+20A8 ₨ (இலங்கை, பாக்கித்தான் மற்றும் நேபாளம்) |
பகுப்பு |
இந்திய ரூபாய்க் குறியீடு (₹) என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ நாணயமான இந்திய ரூபாயின் பணக் குறியீடு ஆகும். இந்தக் குறியீடு இந்திய மக்களிடையே நடத்தப்பட்ட ஒரு திறந்த போட்டியின் மூலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த வடிவமைப்பு இந்திய அரசுக்கு 15 சூலை, 2010 அன்று அளிக்கப்பட்டது.[1] இந்திய ரூபாய்க் குறியீடு தேவநாகரி எழுத்தான "र" (ர) என்பதையும் இலத்தீன் எழுத்தான "R" என்பதையும் இணைத்து உருவாக்கப்பட்டதாகும். ஒருங்குறி எழுத்துருத் தொகுதியில் U+20B9 என்ற இடத்தில் இக்குறியீடு வைக்கப்பட்டுள்ளது.
தோற்றம்
[தொகு]மார்ச்சு 5, 2009 அன்று இந்திய அரசு இந்திய ரூபாய்க்கு ஒரு குறியீடு உருவாக்கும் போட்டியை அறிவித்தது.[2][3] 2010ஆம் ஆண்டு இந்திய வரவுசெலவுத் திட்டக் கணக்கின்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்திய ரூபாய்க்குக் குறியீடு என்பதை முன்மொழிந்தார். அக்குறியீடு இந்தியாவின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றுவதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.[4] நந்திதா கொர்ரீய-மெக்ரோத்ரா, இத்தேஷ் பத்மசாலி, சிபின் கேகே, சாருக் ஜே இரானி, த. உதயகுமார் ஆகிய ஐந்து பேரது குறியீடுகள் அமைச்சரவைப் பரிந்துரைக்கு அனுப்பட்டன.[5][6][6] இந்தப் போட்டியில் மொத்தம் 3331 குறியீடுகள் பெறப்பட்டன. இதிலிருந்து இவர்கள் ஐந்து பேரது குறியீடுகள் மட்டும் இறுதிச் சுற்றுக்கு சூன் 24, 2010 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டன.[7] இறுதியாக சூலை 15, 2010 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில்[1] த. உதயகுமார் உருவாக்கிய குறியீடு இறுதிப்படுத்தப்பட்டது.[1][8] த. உதயகுமார் திமுக தலைவர் ஒருவரது மகனாவார்.[9] இவர் குவகாத்தியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
மேலும் பார்க்க
[தொகு]தங்கள் நாட்டுப் பணத்திற்கு பன்னாட்டுக் குறியீடுகளைக் கொண்டுள்ள சில நாடுகள்;
- அமெரிக்கா -டாலர் ($)
- ஐரோப்பா -யூரோ (€)
- ஜப்பான் -யென் (¥)
- கியூபா -பெசோஸ்
- கொரியா -வான்
- லாவோஸ் -கிப்ஸ்
- கோஸ்டாரிக்கா -கொலோன்
- சுவிட்சர்லாந்து -பிராங்க்
- நைஜீரியா -நைராஸ்
- மங்கோலியா -டக்ரிஸ்
- உக்ரைன் -இர்வினா
- தாய்லாந்து -பாக்ட்
- துருக்கி -லிராஸ்
- தென்னாப்பிரிக்கா -ரான்ட்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Cabinet approves new rupee symbol". Times of India. 2010-07-15. http://timesofindia.indiatimes.com/biz/india-business/Cabinet-approves-new-rupee-symbol/articleshow/6171234.cms. பார்த்த நாள்: 2010-07-15.
- ↑ http://finmin.nic.in/the_ministry/dept_eco_affairs/currency_coinage/Comp_Design.pdf COMPETITION FOR DESIGN
- ↑ "India seeks global symbol for rupee". Hindustan Times. 2009-03-06. http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?sectionName=HomePage&id=c8097698-a806-4cc2-8c67-668d594057dc&Headline=India+seeks+global+symbol+for+rupee. பார்த்த நாள்: 2009-03-07.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Cabinet defers decision on rupee symbol". Sify Finance. 2010-06-24. http://sify.com/finance/budget-symbol-for-indian-rupee-news-budget-kc0pkgacdbj.html. பார்த்த நாள்: 2010-07-10.
- ↑ "Rupee: Which of the 5 final designs do you like?". Rediff Business. 2010-06-16. http://business.rediff.com/slide-show/2010/jul/16/slide-show-1-rupee-symbol-design-what-the-other-finalists-say.htm. பார்த்த நாள்: 2010-07-26.
- ↑ 6.0 6.1 "List of Five Entries which have been selected for Final". Ministry of Finance, Govt of India. பார்க்கப்பட்ட நாள் 2010-07-15.
- ↑ "Rupee to get a symbol today!". Money Control.com. 2010-02-26. http://www.moneycontrol.com/news/economy/rupee-to-getsymbol-today_466059.html. பார்த்த நாள்: 2010-07-10.
- ↑ "D. Udaya Kumar". IIT Bombay. http://www.idc.iitb.ac.in/students/phd/udayakumar/index.html.
- ↑ http://www.thestatesman.net/index.php?option=com_content&view=article&id=334878&catid=36&Itemid=66