பூட்டானின் இங்குல்ட்ரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூட்டானின் இங்குல்ட்ரம்
1ngultrum.jpg
1 இங்குல்ட்ரம்
ஐ.எசு.ஓ 4217
குறிBTN
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100செட்ரம்
குறியீடுNu.
 செட்ரம்Ch.
வங்கிப் பணமுறிகள்Nu.1, Nu.5, Nu.10, Nu.20, Nu.50, Nu.100, Nu.500, Nu.1000[1][2]
Coins
 Freq. usedCh.20, Ch.25, Ch.50, Nu.1.
 Rarely usedCh.5, Ch.10
மக்கள்தொகையியல்
User(s) பூட்டான் (இந்திய ரூபாயுடன்)
Issuance
நாணய ஆணையம்பூடான் அரச நாணய ஆணையம்
 Websitewww.rma.org.bt
Valuation
Inflation8.3%
 SourceThe World Factbook, 2012 est.
Pegged withஇந்திய ரூபாய்க்கு இணையாக

இங்குல்ட்ரம் (ngultrum, ஐ.எசு.ஓ 4217 குறியீடு BTN) (திஃசொங்கா: དངུལ་ཀྲམ) 1974ஆம் ஆண்டு முதல் பூட்டானின் நாணயமாக உள்ளது. இது 100 செட்ரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

1974இல் அதுவரை நடப்பிலிருந்த ரூபாய்க்கு மாற்றாக இங்குல்ட்ரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இங்குல்ட்ரமின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு இணையாக வைக்கப்பட்டது.

பூட்டான் அரசு தனது பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க 1960களில் இந்தியா பெரிதும் உதவியது. எனவே இந்திய ரூபாயுடன் பிணைக்கப்பட்டிருந்த நிலையை நீடித்தது. மற்ற நாட்டுப் பணச்சந்தைகளில் இங்குல்ட்ரம் தனியாக விற்கப்படுவதில்லை; இந்திய ரூபாயுடன் மாற்றத்தக்கதாக விளங்குகின்றது.

காசுகள்[தொகு]

1974இல் அலுமினியம் 5, 10 செட்ரங்கள், அலுமினியம்-வெங்கல 20 செர்ட்ரங்கள், செப்பு-நிக்கல் 25 செட்ரங்கள் மற்றும் ஒரு இங்குல்ட்ரம் நாணயங்கள் அறிமுகமாயின. 5 செட்ரம் சதுரமாகவும் 10 செட்ரம் சோழி வடிவிலும் உள்ளன. 1979இல் புதிய 5,10, 25, 50 செட்ரம் நாணயங்களும் 1, 3 இங்குல்ட்ரம் நாணயங்களும் வெளியாயின. தற்போது 5, 10 செட்ரம் நாணயங்கள் வழக்கொழிந்து போயுள்ளன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. [1] Accessed 2008-11-13
  2. Bhutan issues new 50- and 1,000-ngultrum notes BanknoteNews.com. Retrieved 2011-10-15.

வெளி இணைப்புகள்[தொகு]