விசயநகர காசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசயநகரப் பேரரசு காலத்திய நாணயங்கள்

விசயநகரப் பேரரசின் நாணயங்கள் விசயநகரப் பேரரசு 1336 முதல் 1646 வரை தென்னிந்தியாவில் ஆண்டுவந்த பேரரசாகும். இவர்களது நாணய முறை மிகவும் சிக்கலானதாக இருந்தாலும் பேரரசு மறைந்த பிறகும் இவை புழக்கத்தில் இருந்தன.

விசயநகரப் பேரரசு பதிப்பித்த நாணயத்தின் அடிப்படை அலகாக தங்க பகோடா அல்லது வராகம் பொறித்த 3.4 கிராம் நாணயம் இருந்தது. கத்திவராகா, தொட்டவராகா, சுத்தவராகா ஆகியன மற்ற மதிப்புகளுடைய நாணயங்களாகும். 1 தங்க வராகா = 2 பிரதாபாக்கள் = 4 கத்திகள் = 8 சின்ன = 4 ஆகா = 2 பெலே. 1 பணா அல்லது வரணா 16 தாரா வெள்ளி நாணயத்திற்கு சமமாக இருந்தது. 1 தாரா 3 செப்பு சிடாலுக்கு சமமாக இருந்தது. ஒரு செப்பு துகானி இரண்டு செப்பு காணி அல்லது காகின்னுக்கும் 5 காசுக்கும் 10 அரை காசுக்கும் சமமாக இருந்தது.[1] இவற்றைத் தவிர மற்ற மதிப்புள்ள வெள்ளி, செப்பு நாணயங்களும் புழக்கத்தில் இருந்தன.[2]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Vijayanagara coins". Harihariah. Oruganti,. Archived from the original on 2007-05-12. பார்க்கப்பட்ட நாள் 2007-07-13.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
  2. "Vijayanagara coins". Govindraya Prabhu S. Archived from the original on 2003-02-02. பார்க்கப்பட்ட நாள் 2007-07-13.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசயநகர_காசு&oldid=3588755" இலிருந்து மீள்விக்கப்பட்டது