பகோடா (நாணயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னிந்திய வணிகத்திற்காக பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி 1705-1780 காலகட்டத்தில் புதுச்சேரியில் வெளியிட்ட "தங்க பகோடா" நாணயம்.

தங்கத்தாலோ அரைத் தங்கத்தாலோ உருவாக்கப்பட்ட பகோடா (Pagoda) என்ற நாணயம் பல்வேறு இந்திய அரசாட்சிகளாலும் பிரித்தானிய, பிரெஞ்சு, டச்சு குடியேற்றவாத வணிக நிறுவனங்களாலும் பதிப்பிக்கப்பட்டன. கதம்பர் வம்சம், கோவாவின் கதம்பர்கள், விஜயநகரப் பேரரசு போன்ற தென்னிந்தியாவின் பல இடைக்கால பேரரசுகள் இந்த நாணயங்களை வெளியிட்டன. [1] வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் இரு வகையான பகோடாக்களை வெளியிட்டன. முதலாவதாக சென்னையிலிருந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வெளியிட்ட நட்சத்திரப் பகோடா (ஸ்டார் பகோடா) என்ற நாணயம் ஏறத்தாழ 8 சில்லிங்குகளுக்கு சமமாக இருந்தது.[2] இரண்டாவது தூத்துக்குடி யிலிருந்து டச்சுக்காரர்கள் வெளியிடப்பட்ட போர்ட்டொ நோவோ பகோடா ஆகும். இதனை ஆற்காடு நவாபும் வெளியிட்டார். இதன் மதிப்பு நட்சத்திர பகோடாவைவிட 25% குறைவாக இருந்தது.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Southern India Coins" இம் மூலத்தில் இருந்து 2007-02-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070204080158/http://www.med.unc.edu/~nupam/postg1.html. பார்த்த நாள்: 2007-03-20. 
  2. "European East India Companies coins". http://www.chennaimuseum.org/draft/gallery/04/01/coin8.htm. பார்த்த நாள்: 2007-03-20. 
  3. "glossary - pagoda". http://www.lib.mq.edu.au/digital/under/research/glossary.html. பார்த்த நாள்: 2007-03-20. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பகோடா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகோடா_(நாணயம்)&oldid=3561406" இருந்து மீள்விக்கப்பட்டது