நர்வார் காசுப் பதிப்பு
Jump to navigation
Jump to search
நர்வார் மன்னராட்சியின் பல்வேறு நாகா மன்னர்களும் 5 முதல் 15 மிமீ அளவிலான வெங்கலத்தாலான காக்கினி நாணயங்களை வெளியிட்டு வந்தனர். ¼, ½ மற்றும் 1 காக்கினி மதிப்பில் நாணயங்களை பதிப்பித்தனர். இடதுபுறம் நோக்கிய நந்தி, சக்கரம், மயில், திரிசூலம் போன்றவை இடம் பெற்றிருந்தன. கி.பி 200-340 காலகட்டத்தில் நர்வார் மன்னராட்சி தற்போதைய மத்தியப் பிரதேசத்தின் பத்மாவதி, காந்திபுரி, உத்தரப் பிரதேசத்தின் மதுரா, விதிசா பகுதிகளை அடக்கி இருந்தது. இந்தக் காலத்தில் இந்தியாவிற்கும் உரோமைக்கும் இடையே சுவைப்பொருட்கள், துணிகள், தங்கம் ஆகியவற்றில் வணிகம் தழைத்தோங்கியிருந்தது. இந்த நாணயங்களில் பிராமி எழுத்துக்களில் முந்தைய பிராகிருதமொழியில் எழுதப்பட்டிருந்தன. [1]
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ http://www.indiancoins.8m.com/naga/NagasOfPadmavati.html Accessed 2007/05/28