உள்ளடக்கத்துக்குச் செல்

பல்லவர் நாணயவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்லவர்கள் கி.பி 600 முதல் 900 வரை தமிழ்நாட்டின் வடபகுதியில் "தொண்டைநாட்டை" ஆண்டு வந்தனர். இவர்கள் காலத்து நாணயங்களைக் குறித்து வால்ட்டர் எலியட் (1858), டி. தேசிகாச்சாரி (1933), சி. மீனாட்சி (1938) மற்றும் எஸ். இராமைய்யா (1967) ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர்.

பல்லவர் நாணயங்கள் ஈயம், செப்பு, வெண்கலத்தில் பதிப்பிக்கப்பட்டன. வெள்ளியிலும் தங்கத்திலும் பதிக்கப்பட்ட நாணயங்கள் இதுவரை கிட்டவில்லை; ஆனால் பல்லவர் கல்வெட்டுக்களில் தங்க நாணயங்களைக் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளன. பல்லவர் நாணயங்கள் பெரும்பாலும் வட்டமாக இருந்தன; மிகக் குறைவானவை சதுரமாக இருந்தன. இவற்றின் எடை 0.450 முதல் 9.8 கிராம் வரை இருந்தன; ஏறத்தாழ 1 செமீ முதல் 2.5 செமீ வரை அளவில் இருந்தன. இந்த நாணயங்களில் நந்தியும் சிங்கமும் சின்னங்களாக பொறிக்கப்பட்டிருந்தன. பல்லவர்களின் அரசச் சின்னமாக நந்தி இருந்தது. பல்லவர் நாணயங்களில் நந்தியும் சிங்கத்தையும் தவிர சுவசுத்திக்கா, சக்கரம், கொடி, இரு கொடிமரக் கப்பல், யானை, பிறை போன்ற சின்னங்களும் இருந்தன.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவர்_நாணயவியல்&oldid=3596758" இலிருந்து மீள்விக்கப்பட்டது