தாம் (இந்தியக் காசு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டாம் அல்லது தாம் (Dam) என்பது இந்தியாவில் வழங்கிய மிகச்சிறிய மதிப்புள்ள செப்பு நாணயம். இதனை முதன்முதலில் சேர் சா சூரி தமது ஆட்சியில் (1540 - 1545) அறிமுகப்படுத்தினார். தங்க நாணயங்களை மொகர் என்றும் வெள்ளி நாணயங்களை ரூபாய் என்றும் செப்புக் காசுகளை டாம் என்றும் குறிப்பிட்டார்.[1] பிந்தைய முகலாய அரசர்கள் இவற்றை (ரூபாய்), (மொகர்) சீர்தரப்படுத்தி இந்தியாவில் முறையான நாணயவியலை நிலைநிறுத்தினர். ஆங்கில மொழியில் நிலவும் ஐ டோன்ட் கிவ் அ டாம் ( “I don't give a dam[n]″) என்ற சொல்லாடல் இந்த நாணயத்தின் குறைந்த மதிப்பையொட்டியே வந்திருக்கலாம் என சிலர் கருதுகின்றனர்.[2]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Mughal Coinage at RBI Monetary Museum. Retrieved on 4 May 2008.
  2. Gorrell, Robert, Watch Your Language: Mother Tongue and Her Wayward Children, University of Nevada Press, 1994. Watch Your Language at Google Books
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்_(இந்தியக்_காசு)&oldid=1925125" இருந்து மீள்விக்கப்பட்டது