வங்காளதேச இட்டாக்கா
টাকা | |
---|---|
৳1000 வங்கித்தாள் | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | BDT (எண்ணியல்: 050) |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
குறியீடு | ৳ |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | பைசா |
வங்கித்தாள் | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | ৳2, ৳5, ৳10, ৳20, ৳50, ৳100, ৳500 & ৳1000 |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | ৳1, ৳25, ৳40, ৳60 |
Coins | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | ৳1, ৳2, ৳5 |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 1, 5, 10, 25 & 50 பொய்ஷா |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | ![]() |
வெளியீடு | |
நடுவண் வங்கி | வங்காளதேச வங்கி |
இணையதளம் | www |
அச்சடிப்பவர் | வங்காள தேச பத்திரமான அச்சடிப்பு நிறுவனம் |
இணையதளம் | www |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 6.17 % |
ஆதாரம் | BBS, ஆகத்து 2015[1] |
![]() |
இந்தக் கட்டுரை வங்காள உரை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு பிழையாகக் காட்டப்படும். |
வங்காளதேச இட்டாக்கா (வங்காள மொழி: টাকা, குறி: ৳ அல்லது Tk, குறியீடு: BDT) வங்காளதேச மக்கள் குடியரசின் அலுவல்முறை நாணயம் ஆகும். ৳5க்கும் அதற்கு மேலும் மதிப்புள்ள வங்கித்தாள்களை வங்காளதேச வங்கி வெளியிடுகின்றது. ৳1, ৳2 வங்கித்தாள்களையும், நாணயங்களையும் வெளியிடுவது வங்காளதேச அரசின் நிதித்துறை அமைச்சரகத்தின் பொறுப்பில் உள்ளது. பெரும்பாலும் "৳" என்ற சின்னமும் கடை இரசீதுகளில் "Tk" என்ற குறியும் பயன்படுத்தப்படுகின்றது. ৳1 100 பைசாக்களாக (வங்காள உச்சரிப்பு:பொய்ஷா) பிரிக்கப்பட்டுள்ளது.
வங்காள மொழியில் இட்டாக்கா என்ற சொல் பணம்,நாணயம்,தாள்கள் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுப் பெயராகும். எனவே வங்காளமொழியில் பேசுமொருவர் எந்த நாணயத்தையும் இட்டாக்கா எனக் குறிப்பிடுவார். இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், திரிபுராவிலும் இந்தியாவின் அலுவல்முறையான இந்திய ரூபாய் "இட்டாக்கா" என பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுகின்றது.
மேற்சான்றுகள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- Bangladesh Bank's page on currencies in circulation பரணிடப்பட்டது 2017-07-01 at the வந்தவழி இயந்திரம்
- High resolution scans of Bangladeshi currency
- "வங்காளதேச இட்டாக்கா (வங்கிப் பணமுறிகள்)". http://www.bis-ans-ende-der-welt.net/Bangladesch-B-En.htm. பார்த்த நாள்: 2018-09-15. (ஆங்கிலம்) (செருமன் மொழி) (பிரெஞ்சு)