த. உதயகுமார்
Appearance
த. உதயகுமார் | |
---|---|
பிறப்பு | 1978 கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் |
|
பணி | துணை பேராசிரியர், இ.தொ.க. குவகாத்தி |
அறியப்படுவது | 2010 ஆம் ஆண்டு இந்திய ரூபாய்க் குறியீடு வடிவமைத்தவர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | இந்திய ரூபாய்க் குறியீடு |
உதயகுமார் தர்மலிங்கம் (Udaya Kumar Dharmalingam) ஒரு இந்திய கல்வியாளர் மற்றும் வடிவமைப்பாளர் ஆவார். இவர் இந்திய ரூபாய்க் குறியீட்டை வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது. [1] 3,000 பேருக்கு மேல் வடிவமைப்புகளிலிருந்து ஐந்து பேருைடய வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது அதில் இவருடையது ஒன்று ஆகும். [2] குமாரின் கூற்றுப்படி, இந்த வடிவமைப்பு இந்திய மூவர்ணத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.
தொடக்க வாழ்க்கை
[தொகு]உதயகுமார், 1978 இல் கள்ளக்குறிச்சியில் (தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகர்) பிறந்தார். இவரது தந்தை என். தர்மலிங்கம், 1971-76 காலகட்டத்தில் ரிஷிவந்தியம் தொகுதிக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) சார்பில் பணியாற்றினார்.[3]
ஆராய்ச்சி
[தொகு]உதயகுமார், வரைபட வடிவமைப்பு, அச்சுக்கலை, வடிவமைப்பு சார்ந்த ஆராய்ச்சிகளில் ஆவல் கொண்டுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rupee gets a new symbol". பார்க்கப்பட்ட நாள் 19 November 2011.
- ↑ "Final Selection for the Symbol for Indian Rupee – List of Five Entries: Ministry of Finance, Government of India". Finmin.nic.in. Archived from the original on 25 July 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-07-30.
- ↑ "'My son has brought glory to TN'". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2016-03-29.