இந்திய ஒரு ரூபாய் தாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1917 இல் இந்தியாவில் முதன் முதலில் புழக்கத்தில் விடப்பட்ட ஒரு ரூபாய் தாள்

இந்திய ஒரு ரூபாய் பணத்தாள் (Indian 1-rupee note) என்பது முதன்முதலில் 1917 நவம்பர் 30 அன்று இங்கிலாந்தில் அச்சடிக்கப்பட்டு, இந்தியாவில் புழக்கத்திற்கு வந்தது ஆகும். இந்த நோட்டின் மீது இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் தலை முத்திரையிடப்பட்டிருந்தது. பிரித்தானிய இந்தியப் பேரரசில் வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயங்கள் வெள்ளி நாணயங்களாக வெளியிடப்பட்டன. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் காரணமாக, வெள்ளிக்கு பற்றாக்குறை இருந்தது. இதனால் இந்த கால கட்டத்தில் வெள்ளி நாணயங்களுடன் ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் விடப்பட்டன. இதுவரை 44 முறை ஒரு ரூபாய் தாளின் நிறம், அளவு, அடையாளங்கள் ஆகியவற்றை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றி உள்ளது.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. என். மகேஷ்குமார் (2017 திசம்பர் 1). "ஒரு ரூபாய் நோட்டுக்கு வயது 100". செய்தி. தி இந்து தமிழ். பார்த்த நாள் 3 திசம்பர் 2017.