இந்திய அணா
Jump to navigation
Jump to search
இந்திய அணா பிரித்தானிய இந்தியாவில் புழக்கத்திலிருந்த ஒரு நாணய அலகு முறை. இசுலாமிய ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அணா முறை, பிரித்தானிய ஆட்சி முடிந்து இந்தியா விடுதலை பெற்ற பின்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தது. 1957 இல் இந்திய ரூபாய் முழுமையாக தசமப்படுத்தப்பட்ட பின் கைவிடப்பட்டது.
ஒரு அணா ஒரு ரூபாயில் 1/16 க்கு சமானம். ஒரு அணாவில் நான்கு பைசாக்கள் (இவை தற்போதுள்ள பைசாகள் அல்ல) இருந்தன. அணா எனும் சொல் 1/16 என்ற எண்ணிக்கையைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது. அணா அலகுகள் கைவிடப்பட்டப் பிறகும் பல ஆண்டுகள் புதிய 50 பைசா நாணயம் எட்டணா (எட்டு அணா) என்றும் 25 பைசா நாணயம் நாலணா (நாலு அணா) என்றும் அழைக்கப்பட்டு வந்தன.