இந்திய அரசு காசாலை, மும்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசாலையைச் சித்தரிக்கும் அஞ்சல் அட்டை.

இந்திய அரசு காசாலை, மும்பை (India Government Mint, Mumbai) என்பது இந்தியாவில் உள்ள நான்கு காசாலைகளில் ஒன்று ஆகும். இது மும்பை நகரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலை 1829 ஆண்டில் மும்பை மாகாண ஆளுநரால் நிறுவப்பட்டது. நினைவு மற்றும் வளர்ச்சி சார்ந்த நாணயங்களின் உற்பத்தியே இக்காசாலையின் முதன்மையான வேலையாகும். இந்த ஆலை   தென் மும்பையில் உள்ள  இந்திய ரிசர்வ் வங்கியின்  எதிரில்  உள்ளது.

துவக்கத்தில் இது பம்பாய் மாகாண ஆளுநரால் நிர்வகிக்கப்பட்டது, பின்னர் 1876 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி நிதி அமைச்சகத்தின் தீர்மானம் 247 இன்படி இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.