ரஜப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுலாமிய நாட்காட்டி

 1. முஃகர்ரம்
 2. சஃபர்
 3. ரபி உல் அவ்வல்
 4. ரபி உல் ஆகிர்
 5. ஜமா அத்துல் அவ்வல்
 6. ஜமா அத்துல் ஆகிர்
 7. ரஜப்
 8. ஷஃபான்
 9. ரமலான்
 10. ஷவ்வால்
 11. துல் கஃதா
 12. துல் ஹஜ்

ரஜப் (அரபி: رجب‎) என்பது இசுலாமிய ஆண்டின் ஏழாவது மாதமாகும். இசுலாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் கிரெகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக்கும்.

ரஜப் என்ற சொல்லின் வரையறை, "மரியாதை" ஆகும். இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று. இசுலாத்திற்கு முன்பும் அரபிகள் நான்கு மாதங்களில் போர் புரிவதை தடுத்தனர் என கருதப்படுகிறது.

ரஜப் மாதத்தில் சுன்னி இசுலாமியம் நான்காம் கலீபா மற்றும் சியா இசுலாமியம் முதல் இமாம் அலி(ரலி) அவர்கள், முசுலிம்களின் மிகவும் புனித இடமான காபாவின் உள்ளே பிறந்தார் என நம்பப்படுகிறது.

காலம்[தொகு]

இஸ்லாமிய நாட்காட்டி என்பது ஒரு சந்திர நாட்காட்டி ஆகும். அமாவாசை மற்றும் முதல் பிறை தோன்றும் போது போது சிறிது காலம் வித்தியாசப் பட்டு தொடங்கும். சந்திர ஆண்டு சூரிய ஆண்டை விடக் 11 முதல் 12 நாட்கள் குறைவாக இருப்பதால், ரஜப் மாதம் எல்லா காலப் பருவங்களிலும் மாறிவரும்.

இஸ்லாமிய நிகழ்வுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஜப்&oldid=3492089" இருந்து மீள்விக்கப்பட்டது