ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டாக்டர். கேசவ் பலிராம் ஹெட்கேவர், ஆர் எஸ் எஸ் - அமைப்பை நிறுவியவர்

ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (Rashtriya Swayamsevak Sangh, தேசியத் தொண்டர் அணி, ஆர்.எஸ்.எஸ்) இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பு அல்லது ஆர்.எஸ்.எஸ் (RSS, தேசிய தொண்டர் அணி) என அழைக்கப்படுகின்றது. இது 1925 செப்டம்பர் 27ம் தேதி டாக்டர் கே. பி.ஹெட்கேவர் எனபவரால் நிறுவப்பட்டது.[1].

சங்கமானது ஆரம்பிக்கப்பட்ட பத்து வருடங்களுக்குள் வடஇந்தியாவில் பெற்ற செல்வாக்கு மிக அதிகம். இதற்க்கு மிக முக்கிய காரணம் , ஹிந்து மதத்தின் அனைத்து பிரிவுகளுக்குள்ளும் தவறாமல் கடைபிடிக்கப்படும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஆர்.எஸ்.எஸ் முற்றிலுமாக ஒதுக்கி வைத்தது.[சான்று தேவை] ஹிந்து என்கிற ஓர் அடையாளம் நமக்கு போதும். [சான்று தேவை] அத்தனை பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமான சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துக்கட்டி "ஹிந்து" என்று ஒன்று சேர்வோம் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.[சான்று தேவை] ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் மட்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகின்றது. மியான்மரில் சனாதன் தர்ம சுயம்சேவாக் சங்கம் (எஸ்.டி.எஸ்.எஸ்), மொரிசியசில் மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம் (எம்.எஸ்.எஸ்) மற்றும் சில இடங்களில் இந்து சுயம்சேவாக் சங்கம் ஆக இயங்குகின்றது.[சான்று தேவை]

இதன் முக்கியக் கொள்கை கலாச்சார தேசியவாதம் எனப்படுகிற முழு மனிதப்பற்றைக் கொண்டு உயிரான, தனித்துவம் மற்றும் நன்னெறிகளைக் கொண்ட பாரம்பரிய இந்தியாவிற்கு புத்துயிர் அளிப்பது.[சான்று தேவை] தேசத்துக்கு சேவை செய்வதை அன்னை இந்தியாவுக்கு (பாரத மாதா) சேவை செய்வதாகக் கொண்டு இந்தியாவை தன் தாய் நாடாக நினைத்து அதை பாதுகாப்பது.[சான்று தேவை]

ஆர்.எஸ்.எஸ் நேரடியாக தேர்தலில் பங்கு கொள்வதில்லை.[2]அதன் கொள்கையை ஒற்றிருக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்கும். அதன்படி ஆதரித்த கட்சிதான் பாரதீய ஜனதாக் கட்சி.ஆர்.எஸ்.எஸ் சங்கரிவார் அமைப்புடன் அதிகத் தொடர்புடையது. [சான்று தேவை]=>=>=>இந்திய அண்ணல் காந்தி அடிகனள சுட்டுக்கென்ற நாதுராம் கேட்சே இந்த ஆர் எஸ் எஸ் இயக்கத்னத சார்ந்தவன் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

தடை[தொகு]

ஆர் எஸ் எஸ் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 1948 காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது, அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபொழுதும் மற்றும் 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுதும் தடைசெய்யப்பட்டிருந்தது.[சான்று தேவை]

1948 ஆம் வருட தடை[தொகு]

1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடைசெய்து 1948 பிப்ரவரி 4-ல் அரசு அறிக்கை வெளியானது.இதில், காந்திஜியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ்-தான் காரணம் என்று கூறப்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ். இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அந்த இயக்கத்தவர் அப்படி நடந்துகொள்ளவில்லை. விரும்பத்தகாத, அதேசமயம் பயங்கரமான சில நடவடிக்கைகளில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ளனர். பொதுச் சொத்துக்களுக்குத் தீயிடல், சேதப்படுத்துதல், கொள்ளை போன்ற சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவருகிறது. சட்ட விரோதமாக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும், குண்டுகளையும் அவர்கள் சேகரித்துள்ளனர். அரசுக்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்பாடுகளில் ஈடுபடுமாறும் ஆயுதங்களைச் சேகரிக்குமாறும் அரசுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுமாறும் காவல் துறை – ராணுவம் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட மறுக்குமாறும் கூட அவர்கள் கூறுகின்றனர். அவர்களுடைய செயல்பாடுகள் ரகசியமாகவே உள்ளன

இந்தியஅரசு , 1948 பிப்ரவரி 4 அரசு அறிக்கை

என்று அரசு வெளியிட்ட தடை நடவடிக்கையில் காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ். தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற அரசின் அறிவுரையை ஏற்காமலேயே, தங்கள் மீதான தடையை அரசு விலக்க வேண்டும் என்று கோல்வால்கர் விரும்புகிறார் என்று படேல் தலைமையிலான உள்துறை அமைச்சகம் 1948 நவம்பர் 14-ல் அறிக்கை வெளியிட்டது . 1948 செப்டம்பர் 11-ல் கோல்வால்கருக்கே ஒரு கடிதம் எழுதினார். இந்து சமுதாயத்துக்காக ஆர்.எஸ்.எஸ். ஆற்றிவரும் தொண்டுகளைப் பாராட்டினாலும் அதன் ஆட்சேபிக்கத்தக்க செயல்பாடுகளைப் பட்டியலிட்டார். இதற்குப் பிறகு , ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதான தடையை விலக்க சில முக்கிய நிபந்தனைகளை படேல் விதித்தார். "இந்திய தேசியக் கொடியை மதிப்போம், வெளிப்படையாகச் செயல்படுவோம், அமைதியான வழிமுறைகளிலேயே ஈடுபடுவோம், அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி நிற்போம்" என்பது அந்த நிபந்தனைகளில் சில. ஆர்.எஸ்.எஸ். கலாச்சாரப் பணியில்தான் ஈடுபடும்.அரசியலில் ஈடுபடாது என்று ஆர்.எஸ்.எஸ். தனது அமைப்பு விதியிலேயே வரையறுத்து 1949-ல் படேலிடம் அளித்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விதியின் 4 (பி) பிரிவு இதைத் தெரிவிக்கிறது. இதன் பிறகே 1949 ஜூலை 11-ல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை விலக்கப்பட்டது..[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.britannica.com/EBchecked/topic/919613/Rashtriya-Swayamsevak-Sangh-RSS
  2. 2.0 2.1 "மறக்கப்பட்ட 1949 வாக்குறுதி". தி இந்து (15 அக்டோபர் 2013). பார்த்த நாள் 15 அக்டோபர் 2013.