துர்கா வாகினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துர்கா வாகினி (Durga Vahini), விஸ்வ இந்து பரிசத்தின் மகளிர் அணியாகும். 1991இல் துவக்கப்பட்ட துர்கா வாகினியின் நிறுவனத் தலைவர் சாத்வி ரிதம்பரா ஆவார். இவ்வமைப்பு பெண்களை இந்து சமயக் கூட்டங்களிலும், கலாசார நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ள ஊக்கமளிக்கிறது. பெண்கள் தங்களாகவே முன்வந்து தங்களின் உடல் மற்றும் அறிவு மேம்பாட்டை வளர்த்து, இந்து சமய கலாசாரத்தையும் பண்பாட்டு மரபுகளையும் பேணிக்காக்க இவ்வமைப்பின் மூத்த தலைவர் கல்பனா வியாஸ் வலியுறுத்துகிறார்.[1] இவ்வமைப்பின் நோக்கம் இந்து மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டவும், சமுக சேவை மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்தலே.[2] 2002 ஆண்டு முடிய இவ்வமைப்பில் உள்ள 8000 உறுப்பினர்களில் 1000 பேர் அகமதாபாத் நகரத்தில் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Women 'Ram Bhakt' hog limelight". The Tribune. 2002-04-11. பார்க்கப்பட்ட நாள் 2008-06-29. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. பட்ரீசியா ஜெப்பெரி, அம்ரிதா பாசு (1997). பாலின பகிர்வு: தெற்காசியாவில் பெண்களின் செயல்திறன் மற்றும் அரசியலாக்கப்பட்ட சமயம்.. ரௌட்லெஜ். பக். 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-415-91866-9. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்கா_வாகினி&oldid=3359167" இலிருந்து மீள்விக்கப்பட்டது