வீடு திரும்புதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வீடு திரும்புதல் அல்லது தாய் மதம் திரும்புதல் (Ghar Wapsi) (இந்தி: घर वापसी, என்பது இந்து சமயத்திலிருந்து பிற சமயங்களுக்கு மதம் மாறியவர்கள் மீண்டும் தாய் மதமான இந்து சமயத்தில் மீண்டும் இணைவதற்கு வீடு திரும்புதல் என்பர். இதனை இந்தியாவில் செயல்படும் விசுவ இந்து பரிசத் மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் அரசின் விதி முறைகளை மீறி வீடு திரும்புதல் என்ற நிகழ்ச்சிகள் மூலம் வேற்று மதத்தினரை மீண்டும் இந்து சமயத்தில் சேர்க்கும் செயல் இந்திய நாடு முழுவதும் நடைபெறுகிறது.இதனால் நாடு முழுவதும் வீடு திரும்புதல் நிகழ்ச்சியைச் சர்ச்சைக்குரிய விஷயமாகப் பேசப்படுகிறது. [1][2]

கேரளாவின் ஐந்து மாவட்டங்களிலும், கோவாவிலும் வேற்று மதத்தில் இணைந்த கத்தோலிக்க கிறித்தவர்களை மீண்டும் தாய் மதமான இந்து சமயத்திற்கு மாற்றும் நிகழ்ச்சிகள் நடத்த விஷ்வ இந்து பரிசத் அமைப்பு முயல்கிறது.[3].

ஆந்திரா மற்றும் தெலிங்கானா மாநிலத்திலிருந்து 8,000 நபர்கள் மீண்டும் வீடு திரும்பல் நிகழ்வு மூலம் இந்து சமயத்திற்கு விஷ்வ இந்து பரிசத் மூலம் மதமாறியுள்ளனர்.[4]

ஏற்கனவே பிற மதங்களுக்கு மாறிய 1,200 நபர்கள் மீண்டும், வீடு திரும்புதல் என்ற நிகழ்ச்சியின் மூலம், இந்து சமயத்திற்குத் திரும்பியுள்ளனர் [5]

வீடு திரும்புதல் என்ற நிகழ்வின் மூலம் தாய் மதமான இந்து மதத்திற்கு மதம் மாற விரும்பும் மஞ்ஹி எனும் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தங்களுக்கு, கல்வி, சுகாதாரம், மேம்பட்ட வாழ்க்கை வசதிகள் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.[6].

தாய் மதம் திரும்புதல் என்ற நிகழ்ச்சியின் மூலம் மேற்கு வங்காளத்தில் 100 ஆதிவாசி கிறித்தவர்கள் தாய் மதமான இந்து மதத்திற்கு மதம் மாறியுள்ளனர். [7]

மீண்டும் தாய் மதம் திரும்பும், வீடு திரும்பல் என்ற நிகழ்ச்சியின் மூலம் இந்து மதத்திற்கு மக்கள் மாற்றப்படுவதை வேறு சமயத்தினர் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். [8]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீடு_திரும்புதல்&oldid=1900042" இருந்து மீள்விக்கப்பட்டது