பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே அல்லது பி. எஸ். மூஞ்சே (Balakrishna Shivram Moonje or B.S.Moonje, also B.S.Munje), 12 டிசம்பர் 1872 – 3 மார்ச் 1948) 1925-இல் பிரித்தானிய இந்தியாவில் நிறுவப்பட்ட இந்து மகாசபையின் தலைவரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், மருத்துவரும் ஆவார். பின்னர் இராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தை தோற்றுவித்த ஐவரில் பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சேவும் ஒருவர் ஆவார். மற்றவர்கள் கணேஷ் தாமோதர் சாவர்க்கர், விநாயக் தாமோதர் சாவர்க்கர், கேசவ பலிராம் ஹெட்கேவர், மற்றும் இலட்சுமன் வாமன் பரஞ்பே ஆவார்.[1]:306 கணேஷ் தாமோதர் சாவர்க்கர், ஒருவர் ஆவார்.[2][1]:306

பிரித்தானிய இந்தியாவின் மத்திய மாகாணத்தில், தற்கால சத்தீஷ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் நகரத்தில் அந்தணர் குடும்பத்தில் 1872-ஆம் ஆண்டில் பிறந்தவர் பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே.[3]1898-ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்தார். பின்னர் மும்பை மாநகராட்சியில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் இரண்டாம் போயர் போரில் மருத்துவராக பணியாற்றினார். 1907-ஆம் ஆண்டில்

மூஞ்சே பால கங்காதர திலகரின் சீடர் ஆவார். மூஞ்சே நாசிக் நகரத்தில் இந்து மக்களுக்கு இராண்வப் பயிற்சி அளிக்க பள்ளியை நிறுவினார்.

1920-ஆம் ஆண்டில் பால கங்காதார திலகரின் மறைவுக்குப் பின், மகாத்மா காந்தியிடம் கருத்து வேறுபாடு கொண்ட மூஞ்சே இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகி இந்து மகாசபையின் தலைவராக 1927-ஆம் ஆண்டு முதல் 1937-ஆம் ஆண்டு வரை இருந்தார். மேலும் 1925-ஆம் ஆண்டில் இராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தின் நிறுவினர்களில் ஒருவராக இருந்தார்.

அம்பேத்கர் தலைமையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இந்து சமயத்திலிருந்து வெளியேற முயன்ற போது, ஆபிரகாமிய சமயங்களை தழுவாது, இந்தியாவில் தோன்றிய வேறு சமயங்களான பௌத்தம் அல்லது சமணம் போன்ற சமயங்களில் ஒன்றைத் தழுவுமாறு மூஞ்சே மற்றும் சாவர்க்கர் இணைந்து அம்பேத்கருக்கு ஆலோசனைகள் கூறினர்கள். முன்னதாக அம்பேத்கர் தம் சமூகத்தினருடன் சீக்கிய சமயத்தில் இணையப்போவதாக கூறியிருந்தார். [4][5]

மேற்கோள்கள்[தொகு]

ஆதார நூற்பட்டியல்[தொகு]