பனூன் காஷ்மீர்
பனூன் காஷ்மீர் என்பது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கின் பூர்வ குடிகளான காஷ்மீர் பண்டிதர்களின் வாழிடமாகும். சனவரி 1990-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய பயங்கரவாத அமைப்புகளால், இந்துக்களுக்கு எதிரான கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொலை தாக்குதல்களால், காலம் காலமாக வாழ்ந்த தாயகத்தை விட்டு, 3 இலட்சம் முதல் 6 இலட்சம் வரையிலான காஷ்மீர் பண்டிதர்கள் உள்ளிட்ட உடமைகளை இழந்து வெறும் கையுடன் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.[1][2][3][4][5] இவ்வாறு காஷ்மீரிலிருந்து வெளியேறிய இந்துக்கள் ஜம்மு, தில்லி, சண்டிகர் போன்ற நகரங்களில் உள்நாட்டில் அகதிகளாக இன்றும் வாழ்கின்றனர்.
காஷ்மீருக்கு வெளியில் வாழும் காஷ்மீர இந்துக்கள், தங்களின் பூர்வீக வாழிடமான காஷ்மீர் பள்ளத்தாக்கில், ஜீலம் ஆறுக்கு வடக்கே மற்றும் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளை மீண்டும் அடைவதற்கு பனூன் காஷ்மீர் (நமது காஷ்மீர்) [6][7][8] எனும் இயக்கத்தை 1991-ஆம் ஆண்டில் காஷ்மீர எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அக்னிசேகர் என்பவரால் முன்மொழியப்பட்டது. பனூர் காஷ்மீர் எனும் சொல் பனூன் காசீர் என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் நமது காஷ்மீர் என்பதாகும்.
பனூன் காஷ்மீர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக டாக்டர் அக்னிசேகரும், தலைவராக டாக்டர் அஜய் குருங்கும் உள்ளனர். ராகுல் கவுல் அதன் இளைஞர் அணி தலைவராக உள்ளார்.
காஷ்மீர் இந்துக்கள் கோரும் பனூன் காஷ்மீர் பகுதிக்கு ஒன்றியப் பகுதி தகுதி வழங்க தொடர்ந்து இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. பனூன் காஷ்மீர் இயக்கத்தினர் இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ ஆகியவைகளை இந்திய அரசியலமைப்பிலிருந்து நீக்க வலியுறுத்துகிறது.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Excelsior, Daily (2017-01-09). "Involve 'Panun Kashmir' in talks on return of KPs: Ambardar" (in en-US). http://www.dailyexcelsior.com/involve-panun-kashmir-in-talks-on-return-of-kps-ambardar/.
- ↑ Wirsing, Robert (2003) (in en). Kashmir in the Shadow of War: Regional Rivalries in a Nuclear Age. M.E. Sharpe. பக். 149. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780765610898. https://books.google.com/books?id=N9lIvr3q9JwC&pg=PA149.
- ↑ PTI, (Press Trust of India) (July 28, 2019). "Carve out separate state within India for Kashmiri Pandits along Jhelum river: Panun Kashmir". India Today (ஆங்கிலம்). 2019-10-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "700 eminent Kashmiri Pandits support Centre's decision on Article 370: Panun Kashmir". Business Standard India. Press Trust of India. 2019-08-22. https://www.business-standard.com/article/pti-stories/700-eminent-kashmiri-pandits-support-centre-s-decision-on-article-370-panun-kashmir-119082200778_1.html.
- ↑ "Post 370, Kashmiri Hindus wait to return to their homes". The Sunday Guardian Live (ஆங்கிலம்). 2019-10-19. 2019-10-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ PTI (2017-02-12). "Modi govt has no objection to homeland for Kashmiri Pandits, says Jitendra Singh". mint (ஆங்கிலம்). 2021-12-21 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Noorani, A. G. (2016-07-09). "Kashmir's Pandits". Dawn. 12 July 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2021-12-21 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Why Homeland? Introduction". Panun Kashmir. 2013-10-29 அன்று மூலம் பரணிடப்பட்டது.