உள்ளடக்கத்துக்குச் செல்

ராஷ்டிரிய சீக்கியர் இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஷ்டிரிய சீக்கியர் இயக்கம் (Rashtriya Sikh Sangat), என்பது சீக்கியர்களின் சமூக கலாச்சார அமைப்பாகும். இவ்வமைப்பு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்துடன் இணைந்து செயல்படுகிறது. 24 நவம்பர் 1986ஆம் ஆண்டில் குருநானக் பிறந்த நாளான்று துவக்கப்பட்டது. இவ்வமைப்பு இந்து – சீக்கியர்களுக்கிடையே நட்புப் பாலமாக செயல்படுகிறது. 23 சூலை 2004 அன்று ராஷ்டிரிய சீக்கியர் இயக்கத்தை, சீக்கிய சமயத்திற்கு எதிரான அமைப்பு என சீக்கிய மத பீடம் அறிவித்தது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A Copy of Sandesh by Akal Takhat Sahib".

வெளி இணைப்புகள்

[தொகு]