தீனதயாள் உபாத்தியாயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா
Deendayal Upadhyaya 1978 stamp of India.jpg
தலைவர், பாரதீய ஜனசங்கம்
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 25, 1916(1916-09-25)
நக்லா சந்திரபான், மதுரா, உத்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு 11 பெப்ரவரி 1968(1968-02-11) (அகவை 51)
முகல்சராய், உத்திரப் பிரதேசம் இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனசங்கம்
சமயம் இந்து

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா, (Pandit Deendayal Upadhyaya) (25 செப்டம்பர் 1916 – 11 பிப்ரவரி 1968) இந்தியத் தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் போன்ற பன்முகத் தன்மையாளர். பாரதிய ஜன சங்கம் கட்சித் தலைவர்களில் முதன்மையானவர். தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர்.[1]

பொது வாழ்வில்[தொகு]

இராஸ்டிரிய சுயம்சேவாக் சங்கம்[தொகு]

1942ஆம் ஆண்டிலிருந்து ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டார். நாக்பூரில் உள்ள ராஸ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் மாநில அமைப்பில் இரண்டாண்டு பயிற்சிக்குப் பின் முழு நேரப் பிரச்சாரகர் ஆனார்.

தேசிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்த இராஷ்டிர தர்மா எனும் மாத இதழை, 1940இல் லக்னோவில் தொடங்கினார். பின்னர் பஞ்சஜன்யா எனும் வார இதழையும், சுதேசி எனும் நாளிதழையும் தொடங்கினார்.[2]

ஜன சங்கம்[தொகு]

1951ஆம் ஆண்டில் சியாமா பிரசாத் முகர்ஜி, பாரதிய ஜனசங்க கட்சியை நிறுவிய போது, தீனதயாள் உபாத்தியாயா கட்சியின் பொதுச் செயலர் ஆனார். தீனதயாள் உபாத்யாயா குறித்து சியாமா பிரசாத் முகர்ஜி கூறும் போது இரண்டு தீனதயாள் உபாத்யாயாக்கள் இருந்திருந்தால், இந்தியாவின் அரசியல் முகம் மாறியிருக்கும் என்றார். 1953இல் சியாமா பிரசாத் முகர்ஜி மறைந்த பின்னர், ஜன சங்கம் கட்சியின் தலைவரானார்.

இறப்பு[தொகு]

தீனதயாள் உபாத்தியாயா, 11 பிப்ரவரி 1968 அன்று இரவு தொடருந்தில் லக்னோ நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். உத்திரப் பிரதேசம், முகல்சராய் சந்திப்பு தொடருந்து நிலையத்தின் இருப்புப் பாதையில் தீனதயாள் உபாத்தியாயா, அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டு இறந்து கிடந்தார்.[3]

தீனதயாள் பெயர் தாங்கிய நிறுவனங்கள்[தொகு]

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் நினைவைப் போற்றும் விதமாக பல நிறுவனங்களுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 • பண்டிட் தீனதயாள் உபாத்தியா சேகாவதி பல்கலைக்கழகம், சிகார், (இராஜஸ்தான்)
 • பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சனாதன தர்ம பள்ளி, கான்பூர்
 • தீனதயாள் உபாத்தியாயா கோரக்பூர் பல்கலைக்கழகம்
 • தீனதயாள் உபாத்தியாயா மருத்துவமனை, புதுதில்லி[4][5]
 • பண்டிட் தீனதயாள் உபாத்தியா கல்விக்கூடம், கான்பூர்
 • தீனதயாள் உபாத்தியாயா கல்லூரி
 • தீனதயாள் உபாத்தியாயா பெட்ரேலியம் பல்கலைக்கழகம், காந்திநகர், குஜராத் [6]
 • பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா மருத்துவக் கல்லூரி, ராஜ்கோட், குஜராத்.[7]
 • தீனதயாள் உபாத்தியாயா மருத்துவமனை, சிம்லா, இமாசலப் பிரதேசம்

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. http://www.pdpu.ac.in/deendayalji.html
 2. "Deendayal Upadhyaya". Bharatiya Janata party. பார்த்த நாள் 12 September 2014.
 3. "End of an Era". News Bharati. பார்த்த நாள் 2014-09-28.
 4. Deendayal Upadhyaya hospital listing at Delhi Government web site
 5. "DOTS TB Centre".
 6. http://www.pdpu.ac.in
 7. "Medical Colleges". Medadmbjmc.in. பார்த்த நாள் 27 October 2013.

வெளி இணைப்புகள்[தொகு]