சிம்லா
சிம்லா Simla | |
---|---|
மாநகரம் | |
கடிகாரச் சுற்றில்: மால் சாலையில் இருந்து சிம்லாவின் காட்சி; ராஷ்டிரபதி நிவாஸ்; லாங்வுட்; ஜக்கு மலை; இரவில் சிம்லாவில் தொடுவானம்; கெய்ட்டி நாடக அரங்கு; கிறிஸ்ட் தேவாலயம்; சிம்லாவின் நகரக் காட்சி | |
அடைபெயர்(கள்): மலை அரசி | |
ஆள்கூறுகள்: 31°6′12″N 77°10′20″E / 31.10333°N 77.17222°E | |
நாடு | ![]() |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | சிம்லா |
பெயர்ச்சூட்டு | சிறீ சியாமளா தேவி[1] |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | சிம்லா மாநகராட்சி |
• துணை ஆணையர் | ஆதித்ய நேகி, இஆப[2] |
• நகராட்சி ஆணையர் | ஆஷிஷ் கோலி[3] |
• மேயர் | சத்யா கவுண்டல்[4] |
பரப்பளவு[5] | |
• மாநகரம் | 35.34 km2 (13.64 sq mi) |
ஏற்றம் | 2,276 m (7,467 ft) |
மக்கள்தொகை (2011)[6][7] | |
• மாநகரம் | 169,578 |
• தரவரிசை | 1 (in HP) |
• அடர்த்தி | 4,800/km2 (12,000/sq mi) |
• பெருநகர்[6] | 171,640 |
மொழிகள் | |
• அதிகாராப்பூர்வமாக | இந்தி[8] |
• அதிகார்பூர்வ துணை மொழி | சமசுகிருதம்,[9] ஆங்கிலம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 171 001 |
தொலைபேசி குறியீட்டு எண் | 91 177 XXX XXXX |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | ISO 3166-2 |
வாகனப் பதிவு | HP-03, HP-07, HP-51, HP-52, HP-62, HP-63 |
UN/LOCODE | IN SLV |
காலநிலை | Cwb |
பொழிவு | 1,577 mm (62 in) |
Avg. annual temperature | 17 °C (63 °F) |
Avg. summer temperature | 22 °C (72 °F) |
Avg. winter temperature | 6–7 °C (43–45 °F) |
இணையதளம் | hpshimla |
சிம்லா (Shimla also known as Simla, the official name until 1972) [10] என்பது வட இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமுமாகும். 1864 இல், சிம்லா பிரித்தானிய இந்தியாவின் கோடைக்கால தலைநகராக அறிவிக்கப்பட்டது. விடுதலைக்குப் பிறகு, இந்த நகரம் கிழக்கு பஞ்சாபின் தலைநகராக மாறியது. பின்னர் இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகராக மாற்றப்பட்டது. இது மாநிலத்தின் முக்கிய வணிக, கலாச்சார, கல்வி மையமாக உள்ளது.
1815 ஆம் ஆண்டு ஆங்கிலேயப் படைகள் இப்பகுதியைக் கைப்பற்றியபோது சிறிய குக்கிராமங்கள் உள்ளது பதிவு செய்யப்பட்டது. இமயமலையின் அடர்ந்த காடுகளில் நகரத்தை நிறுவுவதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை ஆங்கிலேயர்களை ஈர்ப்பதாக இருந்தது. கோடைகால தலைநகராக உருவான இங்கு, 1914 ஆம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தம் மற்றும் 1945 ஆம் ஆண்டு சிம்லா மாநாடு உட்பட பல முக்கியமான அரசியல் கூட்டங்கள் நடந்தன. விடுதலைக்குப் பிறகு, 28 சமஸ்தானங்களின் ஒருங்கிணைப்பின் தொடர்ச்சியாக 1948 இல் இமாச்சலப் பிரதேசம் உருவாக்கப்பட்டது. விடுதலைக்குப் பிறகும், நகரம் ஒரு முக்கிய அரசியல் மையமாக இருந்ததன் அடையாளமாக, 1972 ஆம் ஆண்டில் இங்கு மேற்கொள்ளபட்ட சிம்லா ஒப்பந்தம் குறிப்பிடத்தக்கது. இமாச்சல பிரதேச மாநிலம் மறுசீரமைக்கப்பட்ட பிறகு, மஹாசு மாவட்டத்திற்கு சிம்லா என்று பெயரிடப்பட்டது.
சிம்லாவில் பாரம்பரியமான பல கட்டடங்கள் உள்ளன, அவை டுடோர்பெதன் மற்றும் நவ-கோதிக் கட்டிடக்கலைகளில் காலனித்துவ காலத்திலிருந்தே வடிவமைக்கப்பட்டு உருவாக்கபட்டவை. மேலும் இங்கு பல கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் உள்ளன. இங்கு உள்ள காலனித்துவ கால கட்டிடக்கலை, தேவாலயங்கள், கோயில்கள், நகரத்தின் இயற்கை சூழல் போன்றவை சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. நகர மையத்தின் முக்கியமான இடங்களாக சிறீ அனுமான் ஜக்கு (சிலை) , ஜாகூ கோயில், வைஸ்ரீகல் லாட்ஜ், கிறிஸ்து தேவாலயம், மால் சாலை, தி ரிட்ஜ், அன்னடேல் ஆகியவை உள்ளன. நகர மையத்தின் வடக்குப் புள்ளி ஜாக்கூ, தெற்கே அன்னடேல், கிழக்குப் புள்ளி சஞ்சௌலி, மேற்குப் புள்ளி சோட்டா சிம்லா போன்றவை ஆகும். ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை, [11] யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும், மேலும் இது ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகும். இங்குள்ள செங்குத்தான நிலப்பரப்பு காரணமாக, 2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எம்டிபி இமயமலை பைக் பந்தயம் சிம்லாவில் நடக்கிறது. மேலும் இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது. தெற்காசியாவிலேயே மிகப்பெரிய இயற்கை பனிச்சறுக்கு வளையமும் சிம்லாவில் உள்ளது. சுற்றுலா மையமாக மட்டுமல்லாமல், இந்த நகரம் பல கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒரு கல்வி மையமாகவும் உள்ளது.
சொற்பிறப்பியல்[தொகு]

சிம்லா நகரம் காளியின் அவதாரமான சியாமளா அன்னையின் பெயரிலிருந்து வந்தது. இந்த அம்மனுக்கான காளி பாரி கோயிலானது ரிட்ஜ் அருகே பாண்டனி மலையில் உள்ளது. [12] மற்றொரு பதிப்பின் படி, சிம்லாவின் பெயர் 'சியாமாலயா' என்ற சொல்லிலிருந்து வந்தது, நீல பலகைக்கல் என்பது இதன் பொருளாகும். ஆனால் பொதுவாக, சமூகம் முதலில் சொன்ன காரணத்தையே மிகவும் நம்பக்கூடியதாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், நியாயமானதாகவும் கருதுகிறது.
2018 ஆம் ஆண்டில், சிம்லா நகரின் பெயரை சியாமளா என மாற்ற மாநில அரசு முடிவு செய்தது. இருப்பினும், உள்ளூர் மக்களின் எதிர்ப்பைக் கண்டு, மாநில அரசு திட்டத்தை கைவிட்டது. [13]
வரலாறு[தொகு]

இன்றைய சிம்லா நகரம் உள்ள பகுதியின் பெரும்பகுதி 18 ஆம் நூற்றாண்டில் அடர்ந்த காடாக இருந்தது. இப்பகுதியின் பழைய குடியிருப்பின் ஒரே அடையாளமாக இருந்தவை ஜாகூ கோயிலும் ஆங்காங்கே உள்ள சில வீடுகளும் மட்டுமே. [14] காளியின் அவதாரமான ஷியாமளா தேவியின் பெயரால் இந்த பகுதி 'சிம்லா' என்று அழைக்கப்பட்டது.
இன்றைய சிம்லா பகுதியானது நேபாளத்தின் பீம்சென் தபாவால் 1806 இல் நடத்தபட்ட படையெடுப்பால் கைப்பற்றப்பட்டது. ஆங்கிலோ-நேபாளப் போருக்குப் பிறகு (1814-16) சுகௌலி உடன்படிக்கையின்படி பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் இந்தப் பகுதியைத் தன்வசம் கொண்டுவந்தது. மே 1815 இல் டேவிட் ஓக்டர்லோனியின் தலைமையிலான படையினர் மலான் கோட்டையைத் தாக்கியதன் மூலம் கூர்க்கா தலைவர்கள் அடக்கப்பட்டனர். 30 ஆகத்து 1817 தேதியிட்ட ஒரு நாட்குறிப்பு பதிவில், இந்தப் பகுதியை ஆய்வு செய்த ஜெரார்ட் சகோதரர்கள், சிம்லாவை "பயணிகளுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுப்பதற்காக ஒரு பக்கிரி அமைந்திருக்கும் நடுத்தர அளவிலான சிற்றூர்" என்று விவரிக்கின்றனர். 1819 ஆம் ஆண்டில், மலை மாநிலங்களில் உதவி அரசியல் முகவரான லெப்டினன்ட் ரோஸ், சிம்லாவில் ஒரு மரக் குடிலை அமைத்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு அடுத்து வந்தவரும் இசுக்கொட்லாந்து அரசு ஊழியருமான சார்லஸ் பிராட் கென்னடி 1822 ஆம் ஆண்டில் கென்னடி காட்டேஜ் என்ற பெயரில் முதன்முதலில் உறுதியான ஒரு வீட்டைக் கட்டினார். பிரிட்டன் காலநிலையூ ஒத்து உள்ள இப்பகுதிக்கு பல பிரித்தானிய அதிகாரிகள் கோடைகாலங்களில் வரத் தொடங்கினர். 1826 வாக்கில், சில அதிகாரிகள் தங்கள் முழு விடுமுறை காலத்தையும் சிம்லாவில் கழிக்கத் தொடங்கினர். 1827 இல், வங்காளத்தின் தலைமை ஆளுநர் வில்லியம் ஆம்ஹெர்ஸ்ட், சிம்லாவுக்குச் சென்று கென்னடி மாளிகையில் தங்கினார். ஒரு ஆண்டு கழித்து, இந்தியாவின் பிரித்தானிய படைகளின் தலைமைத் தளபதியான ஸ்டேபிள்டன் காட்டன் அதே இல்லத்தில் தங்கினார். அவர் தங்கியிருந்த காலத்தில், ஜாகூவிற்கு அருகில் ஒரு மூன்று மைல் நீள சாலையும், ஒரு பாலமும் கட்டப்பட்டது. 1830 ஆம் ஆண்டில், ராவின் பர்கானா மற்றும் பரௌலி பர்கனாவின் ஒரு பகுதிக்கு ஈடாக கியோந்தல் மற்றும் பட்டியாலாவின் அரசு தலைவர்களிடமிருந்து பிரித்தானியர்கள் சுற்றியுள்ள நிலத்தை கையகப்படுத்தினர். 1830 இல் 30 வீடுகள் என்று இருந்த குடியேற்றமானது 1881 இல் 1,141 வீடுகள் என வேகமாக வளர்ந்தது. [14] [15] .
1832 இல், சிம்லாவில் முதல் அரசியல் சந்திப்பானது நிகழ்ந்தது. கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங்கு பிரபு மற்றும் மகாராஜா இரஞ்சித் சிங்கின் தூதர்களுக்கு இடையே. கர்னல் சர்ச்சிலுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டது: [16]
“ | Shimla is only four days march from Loodianah (Ludhiana), is easy to access, and proves a very agreeable refuge from the burning plains of Hindoostaun (Hindustan). | ” |

கொம்பர்மியரிசுக்கு அடுத்து பதவிக்கு வந்த டல்ஹவுசி பிரபு அதே ஆண்டில் சிம்லாவிற்கு பயணம் மேற்கொண்டார். இதற்குப் பிறகு, மேற்கு வங்காளத்தின் பாலியின் நவாப் (ராஜா) குமார் கோசலின் ஆட்சியின் கீழ் இந்த நகரம் இருந்தது, மேலும் பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநர் (கவர்னர்கள்-ஜெனரல்கள்) மற்றும் தளபதிகள் இங்கு வழக்கமாக பயணம் மேற்கொண்டனர். பல இளம் பிரித்தானிய அதிகாரிகள் உயரதிகாரிகளுடன் பழகுவதற்காக இந்தப் பகுதிக்கு வரத் தொடங்கினர். சிம்லா விருந்துகள் மற்றும் பிற விழாக்களுக்கு பிரபலமான மலைவாசத்தலமாக மாறியது. அதைத் தொடர்ந்து, மேல்தட்டு குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான உறைவிடப் பள்ளிகள் அருகிலேயே நிறுவப்பட்டன. 1830 களின் பிற்பகுதியில், நகரம் நாடகம் மற்றும் கலை கண்காட்சிகளுக்கான மையமாகவும் மாறியது. மக்கள் தொகை அதிகரித்ததால், பல பங்களாக்கள் கட்டப்பட்டு, நகரத்தில் ஒரு பெரிய கடைவீதி நிறுவப்பட்டது. இந்திய தொழிலதிபர்கள், முக்கியமாக சூட் மற்றும் பார்சி சமூகங்களைச் சேர்ந்தவர்கள், பெருகிவரும் ஐரோப்பிய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இப்பகுதிக்கு வந்தனர். 1844 செப்டம்பர் 9 அன்று, கிறிஸ்து தேவாலயத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பல சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு, 560 அடி நீள சுரங்கப்பாதையுடன் இந்துஸ்தான்-திபெத் சாலையின் கட்டுமானம் 1851-52 இல் மேற்கொள்ளப்பட்டது. தற்போது தல்லி சுரங்கப்பாதை என்று அழைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை 1850 இல் மேஜர் பிரிக்ஸ் என்பவரால் தொடங்கப்பட்டு 1851-52 குளிர்காலத்தில் முடிக்கப்பட்டது. [17] 1857 ஆம் ஆண்டு சிப்பா எழுச்சி நகரத்தில் தங்கி இருந்த ஐரோப்பிய குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. ஆனால் சிம்லாவில் கிளர்ச்சியால் பெரிய அளவில் பாதிக்கப்பு இருக்கவில்லை.
1863 ஆம் ஆண்டில், இந்தியத் தலைமை ஆளுநர் ஜான் லாரன்ஸ், பிரித்தானிய இந்தியாவின் கோடைகால தலைநகராக சிம்லாவை மாற்ற முடிவு செய்தார். [14] 1,000 மைல்களுக்கு அப்பால் உள்ள கல்கத்தாவிற்கும் இந்த தனித்த இடத்திற்கும் இடையே ஆண்டுக்கு இரண்டு முறை அரசு நிர்வாகத்தை நகர்த்திச் செல்வதில் சிரமம் இருந்தபோதிலும், அவர் அதை மேற்கொண்டார். [18] லிட்டன் பிரபு ( இந்தியத் தலைமை ஆளுநர் 1876-1880) 1876 ஆம் ஆண்டு முதல் வாடகை வீட்டில் தங்கியிருந்தபடி, நகர அமைப்பை திட்டமிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். தலைமை ஆளுநருக்கான இருப்பிடமான வைஸ்ரீகல் லாட்ஜ் அப்சர்வேட்டரி மலையில் கட்டப்பட்டது. சிம்லாவின் பூர்வீக மக்கள் வாழ்ந்த பகுதியின் பெரும்பகுதியானது ஒரு தீ விபத்தால் அழித்தது ("மேல் பஜார்" தற்போது ரிட்ஜ் [19] என்று அழைக்கப்படுகிறது). நகரின் கிழக்கு முனையை ஐரோப்பிய நகரத்தின் மையமாக மாற்ற திட்டமிடப்பட்டதால் அவர்கள் ரிட்ஜிலிருந்து செங்குத்தான சரிவுகளில் மத்திய மற்றும் கீழ் பகுதிகளில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேல் பஜார் ஒரு நகர மண்டபத்திற்காக அழிக்கப்பட்டது. மேலும் அங்கு நூலகம் மற்றும் நடக அரங்கு போன்ற பல வசதிகள், அத்துடன் காவல்துறை மற்றும் இராணுவ தன்னார்வலர்களுக்கான அலுவலகங்கள் மற்றும் நகராட்சி நிர்வாகம் போன்றவை உருவாக்கபட்டன.
இந்தியாவின் தலைமைத் தளபதி, இந்திய இராணுவத்தின் தலைவர் மற்றும் அரசாங்கத்தின் பல துறைகளின் தலைமையகமாகவும் இருந்து பரபரப்பான நகராக இருந்தது. மேலும் பஞ்சாபின் பிராந்திய அரசாங்கத்தின் கோடைகால தலைநகரமானது 1876 இல் நவீன பாகித்தானில் உள்ள முர்ரேயில் இருந்து சிம்லாவிற்கு மாற்றப்பட்டது. இதனால் சமவெளியில் தங்கியிருந்த பல கனவான்களின் மனைவிமார்கள், மகள்கள் போன்றோர் சிம்லா வந்து சேர்ந்தனர். சிந்து-கங்கைச் சமவெளி பகுதியில் நிலவும் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க பிரித்தானி வீரர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வந்தனர்.
500-அடி (150 m) லோயர் பஜார் சுரங்கப்பாதை 1905 இல் கட்டப்பட்டது அதற்கு கச்சார் சுரங்கம் என்று பெயரிடப்பட்டது. எலிசியம் சுரங்கப்பாதை (தற்போது ஆக்லாந்து சுரங்கப்பாதை என்று அழைக்கப்படுகிறது), சுமார் 120 அடிகள் (37 m) ) [17] 1905 இல் கட்டப்பட்டது.
சீனா, திபெத், பிரித்தானிய பேரரசின் பிரதிநிதிகள் ஒன்று கூடி திபெத்தின் நிலை குறித்த நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் தெளிவற்ற ஒப்பந்தம் ஏற்பட காரணமான சிம்லா மாநாடு 1913 மற்றும் 1914 ஆம் ஆண்டுகளில் சிம்லாவில் கூடி ஒப்பந்தம் கையெழுத்தானது. [20] [21] இந்த மாநாட்டில் திபெத்துக்கும் வடகிழக்கு இந்தியாவுக்கும் இடையேயான ஒரு எல்லைக்கோடானது சர் என்றி மக்மகானால் முன்மொழியப்பட்டது. இந்த கோடு மெக்மகோன் எல்லைக் கோடு என்று அறியப்பட்டது. மேலும் இது தற்போது சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நடைமுறை எல்லையாக உள்ளது. இருப்பினும் அதன் சட்டபூர்வ நிலை சீன அரசாங்கத்தால் மறுக்கப்படுகிறது. அக்கால இந்திய அரசியல் தலைவர்களுடன் இந்தியாவின் விடுதலைக்கான திட்டத்தை விவாதிப்பதற்காக இந்திய தலைமை ஆளுநர் ஆர்ச்சிபால்ட் வேவல் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையின் தளமும் இதுதான். சிம்லா மாநாடு என்று அழைக்கப்படும் இந்த பேச்சுவார்த்தை ஒரு தீர்மானத்துக்கு வர முடியாததாக இருந்தது.
1942 முதல் 1945 வரை பிரித்தானிய பர்மாவின் [22] இன்றைய மியான்மர் ) நாடுகடந்த தலைநகராக சிம்லா இருந்தது.

கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை, 1903 இல் திறக்கப்பட்டது. இது சிம்லாவுக்கு எளிதாக வந்துசேர வசதியாக இருந்ததால் சிம்லாவின் பிரபலத்தை மேலும் அதிகரிக்க வைத்தது. கல்காவிலிருந்து சிம்லா வரையிலான தொடருந்து பாதை, 806க்கும் மேற்பட்ட பாலங்கள், 103 சுரங்கப்பாதைகள் கொண்ட, ஒரு பொறியியல் சாதனையாகக் கூறப்பட்டு, "கிழக்கத்திய பிரித்தானிய ஆபரணம்" என்று அறியப்பட்டது. [23] 2008 இல், இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாக மாறியது. [24] இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து, சண்டிகர் (இந்திய மாநிலங்களான பஞ்சாப் மற்றும் அரியானாவின் இன்றைய தலைநகரம்) புதிய நகரமான சண்டிகர் கட்டப்படும் வரை, இது கொஞ்சகாலம் கிழக்கு பஞ்சாபின் தலைநகராக செயல்பட்டது. 1971 இல் இமாச்சலப் பிரதேச மாநிலம் உருவான பிறகு, சிம்லா அதன் தலைநகராக ஆனது.
விடுதலைக்குப் பிறகு, 28 குட்டி சமஸ்தானங்கள் ஒருங்கிணைந்ததன் விளைவாக இமாச்சலப் பிரதேசம் முதன்மை ஆணையரின் மாகாணமாக உருவாக்கப்பட்டு 1948 ஏப்ரல் அன்று செயல்பாட்டிற்கு வந்தது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் பிலாஸ்பூர் (புதிய மாநிலம்) சட்டம், 1954 மூலம் பிலாஸ்பூர் மாநிலம் 1954 ஏப்ரல் முதல் நாள் அன்று இமாச்சலப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது. 1950 சனவரி 26 இல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலானதன் மூலம் இமாச்சலப் பிரதேசம் சி தகுதி மாநிலமாக மாறியது. இதற்கு துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டார். 1952 இல் சட்டமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டது. [25] இமாச்சலப் பிரதேசம்ந 1956 வம்பர்ி் யஒன்றிய ஆட்சிப் பகுதியாக மாறியது. பஞ்சாப் மாநிலத்தின் பகுதிகளான சிம்லா, காங்க்ரா, குளு ,மாஹுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்கள், அம்பாலா மாவட்டத்தின் நலகர் தவட்டம் லோஹாரா, ஆம்ப் மற்றும் உனா கனுங்கோ வட்டங்கள், சந்தோக்கர் கனுங்கோ வட்டத்தின் சில பகுதிகள் மற்றும் ஹோஷியார்பூர் மாவட்டத்தின் உனா தெஹ்சில் சில குறிப்பிட்ட பகுதிகளைத் தொடர்ந்து பதான்கோட் மாவட்டத்தின் தர் கலான் தெஹ்சில் பகுதிகள்;1போன்றவை 966 ஆம் ஆண்டு நவம்பர் 1முதல்ஆநாள் மாச்சலப் பிரதேசத்துடன் இணணைக்கபஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டம், 1966 இலயற்றபட்டுபவழிவகை செய்யப்பட்டது.1970 ஆம் ஆண்டு டதிம்பர் 18 ஆம் தேதி, இமாச்சலப் பிரதேச மாநிலச் சட்டம் நாடாளுமன்றத்்தால்நிறைவேற்றப்பட்டு, 21971, சவரி 125அன்று புதிய மாநிலமாகஉருவானது. இதனால் இமாச்சலப் பிரதேசம்இந்திய ஒன்றியத்தின் பதினெட்டாவது மாநிலமாக உருவானது [25]
சிம்லா ஒப்பந்தத்தில் பாக்கித்தான் அதிபர் சுல்பிக்கார் அலி பூட்டோவும், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் சிம்லாவில் கையெழுத்திட்டனர் . இந்த ஒப்பந்தத்தின் விளைவால் வங்கதேசத்துக்கு பாக்கித்தான் ராஜதந்திர ரீதியாக அங்கீகாரம் அளிக்க வழி வகுக்கபட்டது. 1972 சூலை நாளிட்ட தேதியிலான இந்த ஆவணம் சூலை 3 அன்று இரவு 0040 மணிக்கு கையொப்பமிடப்பட்டது. [26]
விடுதலைக்கு முந்தைய கட்டமைப்புகள் இன்னும் சிம்லாவில் உள்ளன. அவை வைஸ்ரீகல் லாட்ஜ், அசெம்ப்ளி சேம்பர், ஆக்லாந்து ஹவுஸ், கிறிஸ்ட் சர்ச், கோர்டன் கேசில், சிம்லா நகர மண்டபம், கெய்ட்டி நடக அரங்கு போன்ற கட்டிடங்கள் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியை நினைவூட்டுகின்றன. [27] [28] அசல் பீட்டர்ஹாஃப், மற்றொரு வைஸ்ரீகல் குடியிருப்பு, 1981 இல் தீயில் எரிந்தன.
நிலவியல்[தொகு]
சிம்லா இமயமலையின் தென்மேற்குத் தொடர்களில் 31°37′N 77°06′E / 31.61°N 77.10°E இல் உள்ளது. இது சராசரி கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 2,206 மீட்டர்கள் (7,238 ft) ) உயரத்தில் உள்ளது. நகரம் கிட்டத்தட்ட 9.2 கிலோமீட்டர்கள் (5.7 mi) கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நீண்டுள்ளது. [29]
இந்தியாவின் நிலநடுக்க அபாய மண்டலத்தின்படி இந்த நகரம் மண்டலம் IV (அதிக சேத அபாய மண்டலம்) இல் உள்ளது. பலவீனமான கட்டுமான நுட்பங்களும், அதிகரித்து வரும் மக்கள்தொகையும் ஏற்கனவே நிலநடுக்கத்தால் பாதிக்கும் அபாயம் உள்ள இந்தப் பகுதிக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. [30] [31] நகரத்திற்கு அருகில் நீர்நிலைகள் எதுவும் இல்லை, மேலும் அருகிலுள்ள ஆறான சத்லஜ் ஆறு 21 km (13 mi) தொலைவில் உள்ளது. [32] சிம்லா மாவட்டத்தில் பாயும் மற்ற ஆறுகள், நகரத்திலிருந்து இன்னும் தொலைவில் உள்ளன. அவை கிரி மற்றும் பப்பர் ( யமுனையின் இரண்டு துணை ஆறுகள்) ஆகும்.
சிம்லா பகுதியில் பசுமை மண்டலமானது 414 எக்டேர்கள் (1,020 ஏக்கர்கள்) உள்ளது. [23] பைன், தியோடர், கருவாலி, ரோடோடென்ட்ரான் ஆகியவை அடங்கியதாக நகரத்தைச் சுற்றியுள்ள காடுகள் உள்ளன. [33] ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, சுற்றுச்சூழல் சீர்கேடுகள் போன்றவை காரணமாக சிம்லா ஒரு சூழலியல் சுற்றுலாத் தலம் என்ற அதன் பிரபலமான ஈர்ப்பை இழக்கச் செய்துள்ளது. [34] இப்பகுதியில் அதிகரித்து வரும் மற்றொரு கவலையான நிலை, கனமழைக்குப் பிறகு அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகள் ஆகும். [30] [35]
இந்த நகரம் கால்காவிற்கு வடகிழக்கே 88 கிமீ (55 மைல்) தொலைவிலும், சண்டிகருக்கு வடகிழக்கே 116 கிமீ (72 மைல்) தொலைவிலும், மணாலிக்கு தெற்கே 247 கிமீ (154 மைல்) தொலைவிலும், தேசிய தலைநகரான தில்லிக்கு வடகிழக்கே 350 கிமீ (219 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கிருந்து கல்காவை 2.5 மணி நேரத்திற்குள்ளும், சண்டிகரை 3 மணி 15 நிமிடங்களிலும் அடையலாம். தில்லி மற்றும் மணாலி இரண்டும் சிம்லாவிலிருந்து சுமார் 7 மணிநேர தொலைவில் உள்ளன.
சிம்லாவின் ஏழு மலைகள்[தொகு]
சிம்லா ஏழு மலைகளின் மேல் உருவாக்கபட்டது. அந்த ஏழு மலைகள் இன்வெர்ரம் மலை, அப்சர்வேட்டரி மலை, பிராஸ்பெக்ட் மலை, சம்மர் மலை, பாண்டனி மலை, எலிசியம் மலை, ஜக்கு மலை ஆகியவை ஆகும். சிம்லாவின் மிக உயரமான இடம் ஜக்கு மலை ஆகும், இது 2,454 மீட்டர்கள் (8,051 ft) ) உயரமானதாக உள்ளது. அண்மைக் காலங்களில் இந்த நகரம் இந்த ஏழு மலைகளைக் கடந்தும் பரவியதாக உள்ளது.
காலநிலை[தொகு]
சிம்லாவில் கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் கீழ் ஒரு துணை வெப்பமண்டல ஐலேண்ட் காலநிலை உள்ளது. சிம்லாவின் தட்பவெப்பநிலை குளிர்காலத்தில் குளிர்ச்சியாகவும், கோடையில் மிதமான வெப்பமானதாகவும் இருக்கும். [36] வெப்பநிலை பொதுவாக −4 °C (25 °F) முதல் 31 °C (88 °F) வரை இருக்கும். [37]
கோடையில் சராசரி வெப்பநிலை 19 மற்றும் 28 °C (66 மற்றும் 82 °F) வரையிலும், குளிர்காலத்தில், −1 மற்றும் 10 °C (30 மற்றும் 50 °F) வரையிலுல் இருக்கும். ஆண்டில் பெய்யும் மழைப்பொழிவில் நவம்பரில் 15 மில்லிமீட்டர்கள் (0.59 in) மற்றும் ஆகத்தில் 434 மில்லிமீட்டர்கள் (17.1 in) வரையும், குளிர்காலத்தில், வசந்த காலத்தில் மாதத்திற்கு 45 மில்லிமீட்டர்கள் (1.8 in), மற்றும் பருவமழை நெருங்கும் போது சூன் மாதத்தில் சுமார் 175 மில்லிமீட்டர்கள் (6.9 in) என மாதந்தர அளவில் மழையில் மாறுபடு இருக்கும்.
சராசரி ஆண்டு மழைப்பொழிவு 1,575 மில்லிமீட்டர்கள் (62 in) ஆகும். இது மற்ற பெரும்பாலான மலை வாழிடங்களை விட மிகவும் குறைவானது ஆனால் சமவெளிகளை விட இன்னும் கூடுதலானது. இப்பகுதியில் வரலாற்று ரீதியாக திசம்பரில் ஏற்பட்ட பனிப்பொழிவு, சமீப காலமாக (கடந்த பதினைந்து ஆண்டுகளாக) ஒவ்வொரு ஆண்டும் சனவரி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் நடக்கிறது.
அண்மைக் காலங்களில் இங்கு பொழியப்பட்ட அதிகபட்ச பனிப்பொழிவு 2013 சனவரி 18 அன்று 38.6 சென்டிமீட்டர்கள் (15.2 in) ஆகும். தொடர்ந்து இரண்டு நாட்களில் (17, 18 சனவரி 2013), நகரம் 63.6 சென்டிமீட்டர்கள் (25.0 in) ) பனிப்பொழிவைக் கண்டது.
தட்பவெப்ப நிலைத் தகவல், சிம்லா (1981–2010, extremes 1901–2011) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 21.4 (70.5) |
22.6 (72.7) |
25.8 (78.4) |
29.6 (85.3) |
32.4 (90.3) |
31.5 (88.7) |
28.9 (84) |
27.8 (82) |
28.6 (83.5) |
25.6 (78.1) |
23.5 (74.3) |
20.5 (68.9) |
32.4 (90.3) |
உயர் சராசரி °C (°F) | 10.9 (51.6) |
11.9 (53.4) |
15.8 (60.4) |
20.5 (68.9) |
24.1 (75.4) |
24.8 (76.6) |
22.6 (72.7) |
22.0 (71.6) |
22.1 (71.8) |
20.3 (68.5) |
16.7 (62.1) |
13.5 (56.3) |
18.8 (65.8) |
தாழ் சராசரி °C (°F) | 2.8 (37) |
3.7 (38.7) |
7.0 (44.6) |
11.4 (52.5) |
14.6 (58.3) |
16.2 (61.2) |
15.9 (60.6) |
15.5 (59.9) |
14.1 (57.4) |
11.1 (52) |
7.8 (46) |
5.1 (41.2) |
10.4 (50.7) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -10.6 (12.9) |
-8.5 (16.7) |
-6.1 (21) |
-1.3 (29.7) |
1.4 (34.5) |
7.8 (46) |
9.4 (48.9) |
10.6 (51.1) |
5.0 (41) |
0.2 (32.4) |
-1.1 (30) |
-12.2 (10) |
−12.2 (10) |
மழைப்பொழிவுmm (inches) | 66.4 (2.614) |
75.3 (2.965) |
81.2 (3.197) |
60.8 (2.394) |
90.3 (3.555) |
181.9 (7.161) |
329.8 (12.984) |
320.4 (12.614) |
142.3 (5.602) |
36.7 (1.445) |
18.4 (0.724) |
24.2 (0.953) |
1,427.7 (56.209) |
பனிப்பொழிவு cm (inches) | 42 (16.5) |
43 (16.9) |
7 (2.8) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
7 (2.8) |
99 (39) |
% ஈரப்பதம் | 67 | 65 | 57 | 47 | 48 | 62 | 85 | 88 | 79 | 63 | 61 | 60 | 65 |
சராசரி மழை நாட்கள் | 4.2 | 5.6 | 6.1 | 4.8 | 7.0 | 9.6 | 17.0 | 15.7 | 8.2 | 2.3 | 1.3 | 2.0 | 83.7 |
சராசரி பனிபொழி நாட்கள் | 4.2 | 4.2 | 1.4 | 0.0 | 0.0 | 0.0 | 0.0 | 0.0 | 0.0 | 0.0 | 0.1 | 1.3 | 11.2 |
Source #1: | |||||||||||||
Source #2: Weather Atlas[42] |
பொருளாதாரம்[தொகு]
சிம்லாவில் வேலைவாய்ப்பானது பெரும்பாலும் அரசு மற்றும் சுற்றுலாத் துறைகளை நம்பியதாக உள்ளது. [43] கல்வித் துறை மற்றும் தோட்டக்கலை விளைபொருள் சர்ந்த துறைகள் போன்றவை எஞ்சிய வேலைவாய்ப்பின் பெரும்பகுதி கொண்டிருக்கின்றது.
மக்கள்தொகையியல்[தொகு]
மக்கள் தொகை[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 35.34 கிமீ 2 பரப்பளவில் பரந்து விரிந்துள்ள சிம்லா நகரத்தில் 93,152 ஆண்களும் 76,426 பெண்களும் என மொத்தம் 169,578 மக்கள் வசிக்கின்றனர். [44] நகரத்தின் கல்வியறிவு விகிதம் 93.63 சதவீதம் ஆகும். [44]
நகரத்தில் வேலையின்மை விகிதம் 1992 இல் 36% ஆக இருந்து. அது 2006 இல் 22.6% ஆக குறைந்துள்ளது. சமீபத்திய தொழில்மயமாக்கல், சேவைத் துறையின வளர்ச்சி ஆகியவை இந்த வீழ்ச்சிக்குக் காரணம். [45]
மொழி[தொகு]
இந்தி நகரத்தின் பொது மொழியாகும். இது நகரத்தில் முக்கியமாக பேசப்படும் மொழி மற்றும் அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக பொதுவாகப் பயன்படுத்தப்படும் மொழியாகவும் உள்ளது. அடுத்து ஆங்கிலம் கணிசமான மக்களால் பேசப்படுகிறது. மேலும் இது நகரத்தின் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாகும். இவைதவிர, பஹாரி மொழிகள் நகரத்தில் குறிப்பிட்ட அளவு உள்ள பஹாரி இன மக்களால் பேசப்படுகின்றது. 1947 இல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு மேற்கு பஞ்சாபிலிருந்து வந்து குடியேறிய அகதிகளான பஞ்சாபி இன மக்களிடையே பஞ்சாபி மொழி பரவலாக பயன்பாட்டில் உள்ளது.
சமயம்[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகரத்தின் பெரும்பான்மையானவர்களின் சமயமாக இந்து சமயம் 93.5% மக்களால் பின்பற்றப்படுகிறது, அதைத் தொடர்ந்து இசுலாம் (2.29%), சீக்கியம் (1.95%), பௌத்தம் (1.33%), கிறிஸ்தவம் (0.62%), சைனம் ( 0.10%) ஆகியவை உள்ளன. [46]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Home: District WebSite Shimla, Himachal Pradesh, India". 29 November 2005 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ "Profile | Shimla District, Government of Himachal Pradesh | India". hpshimla.nic.in. 24 March 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "New Shimla MC Commissioner lists priorities" (in en). The Tribune. 3 November 2020. https://www.tribuneindia.com/news/himachal/new-shimla-mc-commissioner-lists-priorities-164989.
- ↑ "सत्या कौंडल ने नगर निगम में की क्लर्क की नौकरी, अब बनीं महापौर". Amar Ujala. 19 December 2019. https://www.amarujala.com/shimla/new-mayor-of-municipal-corporation-shimla-satya-kaundal-side-story.
- ↑ "Shimla District Census 2011 Handbook" (PDF). Census of India. p. 39(Urban Section). 20 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 6.0 6.1 "Shimla City Census 2011 data". Census 2011 India. 20 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Himachal Pradesh (India): Districts, Cities, Towns and Outgrowth Wards – Population Statistics in Maps and Charts".
- ↑ "Report of the Commissioner for linguistic minorities: 52nd report (July 2014 to June 2015)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India. pp. 28–29. 28 திசம்பர் 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 26 மார்ச்சு 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Pratibha Chauhan (17 February 2019). "Bill to make Sanskrit second official language of HP passed". The Tribune (Shimla). https://www.tribuneindia.com/news/himachal/bill-to-make-sanskrit-second-official-language-of-hp-passed/730075.html.
- ↑ bedi, rahul. "Steady Decline: From Simla To Shimla, And Now To Shyamala!". www.thecitizen.in (ஆங்கிலம்). 27 டிசம்பர் 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Shimla: রাত তো দূর, সকালেও সিমলার এই স্টেশনে দাঁড়ায় না কোনও ট্রেন! নেপথ্যে কোন ভয়ানক কাহিনী?" (in bn). The Bengali Chronicle. 5 July 2022. Archived from the original on 10 ஆகஸ்ட் 2022. https://web.archive.org/web/20220810082442/https://thebengalichronicle.com/shimla-tunnel-33-horror-story-rpt-2/.
- ↑ "Stunning facts about Shimla no one told you before". Times of India Travel. 10 June 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Scroll Staff. "Himachal Pradesh is not considering any proposal to change Shimla's name to Shyamala, says CM". Scroll.in (ஆங்கிலம்). 10 June 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 14.0 14.1 14.2 Vipin Pubby (1996). Shimla Then and Now. Indus Publishing. பக். 17–34. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7387-046-0. https://books.google.com/books?id=UrZ-ibfhMyMC&pg=PA17. பார்த்த நாள்: 16 August 2013.
- ↑ Harrop, F. Beresford (1925). Thacker's new Guide to Simla. Thacker, Spink & Co.. பக். 16–19.
- ↑ Researches and Missionary Labours Among the Jews, Mohammedans, and Other Sects By Joseph Wolff, published by O. Rogers, 1837
- ↑ 17.0 17.1 "Shimla A five-tunnel town". tribuneindia.com. 16 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Charles Allen, Kipling Sahib, London, Little Brown, 2007
- ↑ Hari Sud (2013). Entrepreneurs of British Shimla. Lulu. பக். 73–74. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-304-11357-3. https://books.google.com/books?id=N8aRBQAAQBAJ. பார்த்த நாள்: 15 August 2015.
- ↑ "Tibet Justice Center – Legal Materials on Tibet – Treaties and Conventions Relating to Tibet – Convention Between Great Britain, China, and Tibet, Simla (1914) [400]". www.tibetjustice.org. 9 July 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ India and the China Crisis. University of California Press. https://books.google.com/books?id=BpSRwC5_EPUC.
- ↑ "Shimla could have been named after Goddess Shamli, but there was no Simla before the British.". https://indianexpress.com/article/research/shimla-rename-shyamala-himachal-pradesh-shamli-5415941/.
- ↑ 23.0 23.1 "Heritage of Shimla" (PDF). Town & Country Planning Department, Shimla. 30 June 2007 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 4 May 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Unesco". Unesco.org. 14 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 25.0 25.1 "History of Himachal Pradesh". National Informatics Centre, Himachal Pradesh. 21 November 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. 31 March 2008 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Relevance Of Simla Agreement – Khan Study Group – Best IAS Coaching Institute for General Studies (GS)". 2 October 2013. 2 October 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 July 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Official Web Site of District Shimla". Hpshimla.nic.in. 29 September 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Shimla: Another age, another time". The Tribune, Chandigarh, India. 26 May 2001 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Shimla Municipal Corporation". 3 April 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 May 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 30.0 30.1 "Concrete buildings make Shimla vulnerable to quake". Indiainfo.com. 22 December 2005 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 October 2005 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Report from the field: Shimla City, India" (PDF). GeoHazards International. 30 June 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 May 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Sight seeing tours around Shimla". HP Tourism Development Corporation. 11 May 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 May 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "H.P. Forest Department". 11 May 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Adarsh Batra (September 2001). "Himalayan Ecotourism in Shimla". ABAC Journal (Assumption University, AU Journal). http://www.journal.au.edu/abac_journal/2001/sep01/article3.pdf.
- ↑ "Landslides disrupt traffic in Shimla". The Tribune, Chandigarh, India. 16 July 2005 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Weather log for Shimla". shimlatimes.in. 22 டிசம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 December 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "World 66, Average temperatures and rain". World 66. 30 September 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 May 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Station: Shimla Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 703–704. 5 February 2020 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 14 February 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M71. 5 February 2020 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 13 February 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Tyagi, Ajit; Singh, O.; Singh, Manmohan; Bhan, S. "Climate of Shimla" (PDF). India Meteorological Department. 20 ஏப்ரல் 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 6 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Climate & Weather Averages in Shimla, Himachal Pradesh, India". Time and Date. 20 July 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Climate and monthly weather forecast Shimla, India". Weather Atlas. 13 June 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "City Development Plan, Shimla". Municipal Corporation, Shimla. 15 November 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 May 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 44.0 44.1 "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. 7 July 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "CM turns down demand for unemployment dole". The Tribune, Chandigarh, India. 5 April 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 46.0 46.1 "C-1 Population By Religious Community - HP". census.gov.in. 19 August 2020 அன்று பார்க்கப்பட்டது.