உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவின் மலை மாநிலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் மலை மாநிலங்கள் (Hill States of India) என்பது பிரித்தானிய இந்தியப் பேரரசின் வடக்கு எல்லைப் பகுதிகளில் அமைந்திருந்த சமஸ்தானங்கள் ஆகும்.

வரலாறு

[தொகு]

  குடியேற்ற காலத்தில், பஞ்சாப் மாகாணத்துடன் நேரடி உறவில் இருந்த சமஸ்தானங்களின் இரண்டு குழுக்கள், இரண்டு போர்கள் மற்றும் எழுச்சியின் பின்னணியில், முன்னாள் முகலாயப் பேரரசின் பெரும்பகுதியை விட பின்னர் பிரித்தானிய இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது.

அதன் சமஸ்தான ஆட்சியாளர்களுக்கு மலை ராஜாக்கள் என்ற முறைசாரா சொல் உருவாக்கப்பட்டது. ராஜ்கர் ராவத் போன்ற பிற பூர்வீக மலைநாட்டு இளவரசர்களுக்கு இது பொருந்தாது.

பிரித்தானிய இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பிளவுக்குப் பிறகு, மலை மாநிலங்கள் [[இந்திய ஒன்றியம்|இந்திய ஒன்றிய]த்துடன் இணைந்தன. பின்னர் அவை [[இந்தியாவின் அங்கமான மாநிலங்களான பஞ்சாப், அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசங்களுக்கு இடையில் பிரிக்கப்பட்டன.

சிம்லா மலைகள்

[தொகு]
சில மலை மாநிலங்களின் வரைபடம், 1911

மேற்கு இமயமலையின் முன்பகுதிகளில் உள்ள 28 சமஸ்தானங்கள் (நிலப்பிரபுத்துவ இளவரசர்கள் மற்றும் ஜைல்தார்கள் உட்பட) சிம்லாவின் பெயரால் சிம்லா மலை மாநிலங்கள் என்று பெயரிடப்பட்டது. [1] இந்த மாநிலங்கள் முக்கியமாக இந்து ராஜ்புத்திரர்களால் ஆளப்பட்டன. [2] [3]

சான்றுகள்

[தொகு]
  1. Imperial Gazetteer of India, v. 8, p. 233.
  2. "Part I: Kangra (1883-1884)", Gazetteer of the Kangra District, 1883-84; reprinted Indus Publ. Co., New Delhi, 1994, p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8173870241
  3. Crill, Rosemary; Jariwala, Kapil (2010). The Indian Portrait, 1560-1860. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788189995379.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]