சிம்லா ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிம்லா ஒப்பந்தம்
இந்திய மற்றும் பாகிஸ்தான் இருதரப்பு தொடர்புகள் தொடர்பான ஒப்பந்தம்
ஒப்பந்த வகை நல்லுறவு மற்றும் அமைதி ஒப்பந்தம்
உருவாக்கம் சூலை 28, 1972 (1972-07-28)
கையெழுத்திட்டது 2 சூலை 1972
(46 ஆண்டுகள் முன்னர்)
 (1972-07-02)
இடம் சிம்லா, இமாசலப் பிரதேசம், இந்தியா
முத்திரையிட்டது ஆகஸ்டு 3, 1972
நடைமுறைக்கு வந்தது ஆகஸ்டு 4, 1972
நிலை இருதரப்பு உறவுகளையும் சீர்செய்தல்
கையெழுத்திட்டோர் இந்திரா காந்தி
((இந்தியப் பிரதமர்))
சுல்பிகார் அலி பூட்டோ
(பாகிஸ்தான் பிரதமர்))
தரப்புகள்  இந்தியா
 பாக்கித்தான்
வைப்பகம் இந்தியா மற்றும் பாக்கித்தான்
மொழிகள் * இந்தி

சிம்லா ஒப்பந்தம் (Simla Agreement)வங்காளதேச விடுதலைப் போரினைத் தொடர்ந்து இந்தியா-பாக்கித்தான் அரசுகளுக்கிடையே ராஜதந்திர நல்லுறவைகளை மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத் தலைநகரான சிம்லாவில் இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையே சூலை 28, 1972 இல் கையெழுத்தானது.[1].

1971-இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாகத் தோன்றியது வங்காள தேசம் (பழைய பெயர் கிழக்கு பாகிஸ்தான்). போரின் இறுதியில் ஏற்பட்ட இவ்வொப்பந்தத்தை இரு நாடுகளின் நாடாளுமன்றங்களும் அதே ஆண்டில் பின்னேற்பு செய்தன.

சிம்லா ஒப்பந்தத்தின் விளைவாக இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இருந்த சியாச்சின் பிணக்கு, மனக்கசப்புகள் மற்றும் காஷ்மீர் குறித்தான சர்ச்சைகள் முடிவுற்று இருதரப்பு நல்லுறவுகள் மேம்பட வழிவகுத்தது. மேலும், இனி ஏற்படும் இருதரப்பு உறவுகளுக்குத் தடையாக வரும் விசயங்களில் கவனம் செலுத்தி அதனைக் களைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Simla Agreement". Bilateral/Multilateral Documents. Ministry of External Affairs, Government of India. பார்த்த நாள் 27 September 2013.
  2. "Indo-Pak Shimla Agreement: 40 years later Read more at: http://ibnlive.in.com/news/indopak-shimla-agreement-40-years-later/268913-3.html?utm_source=ref_article". IANS. IBN Live, CNN IBN (2 July 2012). பார்த்த நாள் 27 September 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்லா_ஒப்பந்தம்&oldid=2271608" இருந்து மீள்விக்கப்பட்டது