கிழக்கு பாக்கிஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிழக்கு பாகிஸ்தான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


கிழக்கு பாக்கிஸ்தான் (வங்காள மொழி: পূর্ব পাকিস্তান ,உருது மொழி : مشرقی پاکستان ) என்ற பகுதி பாக்கிஸ்தான் நாட்டின் கட்டுபாட்டில் 1955ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை இருந்த ஒரு மாகாணத்தை குறிக்கும். கிழக்கு வங்காள மாகாணம் வங்காள மாகாணத்திலிருந்து, பொது வாக்கெடுப்பு முறை மூலம், மத அடிப்படையில் 1947 ஆம் ஆண்டில் இந்திய விடுதலைக்கு முன் பிரிக்கப்பட்டது. இந்தியா-பாக்கிஸ்தான் பிரிவினையின்போது, கிழக்கு வங்காளம் என்று அழைக்கப்பட்ட இப்பகுதி பாக்கிஸ்தானுடன் இணைய விருப்பம் தெரிவித்தது. 1955ஆம் ஆண்டு கிழக்கு வங்காளம் என்ற பெயர் கிழக்கு பாக்கிஸ்தான் என்ற பெயராக மாற்றியமைக்கப்பட்டது. பின்னர், இந்தியாவின் ஆதரவோடு 1971 ஆம் ஆண்டு மேற்கு பாக்கிஸ்தானுடன் நடைபெற்ற போரின் முடிவில் வங்காள தேசம் என்ற சுதந்திர நாடானது.

நிலபரப்பளவு[தொகு]

கிழக்கு பாகிஸ்தான் 147,570 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நாடாகும். இந்த நாட்டின் மூன்று திசையிலும் இந்திய நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தெற்கு திசையில் வங்க கடல் அதன் எல்லைகளாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_பாக்கிஸ்தான்&oldid=2226604" இருந்து மீள்விக்கப்பட்டது