உள்ளடக்கத்துக்குச் செல்

தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு
Southeast Asia Treaty Organization
சுருக்கம்SEATO
உருவாக்கம்1954 செப்டம்பர் 8
வகைபன்னாட்டு இராணுவக் கூட்டணி
தலைமையகம்தாய்லாந்து, பாங்காக்
சேவை பகுதி
தென்கிழக்காசியா
உறுப்பினர்கள்

States protected by SEATO

தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு ( Southeast Asia Treaty Organization (SEATO) (சியோடா) என்பது தென்கிழக்காசியாவின் கூட்டுப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இது தென்கிழக்கு ஆசியா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் அல்லது மணிலா ஒப்பந்தம், என்ற பெயரில் உருவாக்கப்பட்டு பிலிப்பீன்சு தலைநகரான மணிலாவில் 1954 செப்டம்பரில் கையொப்பமானது. 1955 பெப்ரவரி 19 அன்று தாய்லாந்தின் பேங்காக்கில் நடந்த கூட்டத்தில் இந்த அமைப்பு முறையாக நிறுவப்பட்டது.[1] இந்த அமைப்பின் தலைமையகம் பாங்காக்கில் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பில் எட்டு உறுப்பு நாடுகள் இணைந்தன.

இது முதன்மையாக தென்கிழக்கு ஆசியாவில் பொதுவுடமைத் தத்துவத்தின் ஆதிக்கத்தின் பரவுவலைத் தடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது, இந்த அமைப்பு பொதுவாக ஒரு தோல்வியுற்ற அமைப்பாக கருதப்படுகிறது, ஏனென்றால் உள்நாட்டு மோதல் மற்றும் சர்ச்சைகளானது சியாடோ இராணுவத்தின் பொதுப் பயன்பாட்டை தடுத்தது; எவ்வாறாயினும், சியாடோவால் நிதியளிக்கப்பட்ட கலாச்சார மற்றும் கல்வித் திட்டங்கள் தென்கிழக்கு ஆசியாவில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தின. பல உறுப்பு நாடுகள் ஆர்வத்தை இழந்து, பின்வாங்கியதால் 1977 சூன் 30 இல் சியாடோ கலைக்கப்பட்டது.

தோற்றம் மற்றும் கட்டமைப்பு

[தொகு]
A picture of a few SEATO nation leaders in Manila in 1966
1966 அக்டோபர் 24 இல் மணிலாவின் காங்கிரஸ் கட்டிடத்திற்கு முன் சியாடோ நாடுகளின் சில தலைவர்களுடன் பிலிப்பைன்சு ஜனாதிபதி பேர்டினண்ட் மார்க்கோஸ்.

தென்கிழக்கு ஆசிய கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கை அல்லது மணிலா ஒப்பந்தம், 1954 செப்டம்பர் 8 அன்று மணிலாவில் கையெழுத்திடப்பட்டது.[2] அமெரிக்காவின் ட்ரூமன் கோட்பாட்டின்படியான பொதுவுடமை எதிர்ப்பு மற்றும் கூட்டு பாதுகாப்பு குறித்த உடன்படிக்கைகளின் ஒரு பகுதியாக இவ்வொப்பந்தம் அமைந்தது.[3] இந்த உடன்பாடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் கம்யூனிச சக்திகளுக்கு எதிரான கூட்டணிகளை உருவாக்கும் நோக்கங்களைக் கொண்டிருந்தன.[4] இந்தக் கொள்கையானது அமெரிக்கத் தூதரும் சோவியத் நிபுணருமான ஜோர்ஜ் எஃப். கென்னனால் பெரிதும் உருவாக்கப்பட்டது. சியாடோ அமைப்பை பொதுவுடமை எதிர்ப்பு மற்றும் கூட்டுப் பாதுகாப்பு போன்ற நோக்கங்களுக்காக தென்கிழக்கு ஆசியாவில் உருவாக்குவதன் பின்னணியில் இருந்த முதன்மை சக்தியாக, அமெரிக்க ஜனாதிபதி டுவிட் டி. ஐசென்ஹோவரின் அரச செயலாளரான ஜான் ஃபாஸ்டர் டல்லஸ் (1953-1959) கருதப்படுகிறார். அமெரிக்கத் துணை ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் 1953 ஆம் ஆண்டு ஆசியப் பயணத்தின்போது சியாடோவை நேட்டோவிற்கு சமமான ஒரு அமைப்பு எனக் கூறினார்.[5]

சியாடோவானது வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பின் (நேட்டோ) ஒரு தென்கிழக்கு ஆசிய பதிப்பு என்று கருதப்பட்டது,[6] இதில் ஒவ்வொரு உறுப்பு நாடுகளின் இராணுவப் படைகளும் அங்கத்துவ நாடுகளுக்கான கூட்டுப் பாதுகாப்பை வழங்க ஒருங்கிணைக்கப்படும். அமைப்புரீதியாக, 1957 இல் கான்பராவில் ,[7][8] சியோடாவின் செயலாளர் நாயகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் குழு மற்றும் சர்வதேச ஊழியர்களுடன் கூடிய ஒரு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டது. பொருளாதாரம், பாதுகாப்பு, தகவல் ஆகியவற்றிற்கும் குழுக்கள் அமைக்கப்பட்டன. சியாடோவின் முதல் செயலாளர் நாயகமாக தாய்லாந்தின் இராசதந்திரியும், அரசியல்வாதியுமான போட் சரேசன் பொறுப்பேற்றார். இவர் 1952 மற்றும் 1957 ஆண்டுகளுக்கு இடையில் தாய்லாந்தின் அமெரிக்கத் தூதராக பணியாற்றியவர்,[9][10] மேலும் 1957 செப்டம்பர் 1 முதல் 1958 சனவரி வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்தார்.[11]

நேட்டோ கூட்டணி போலல்லாமல், சியாட்டோவில் எந்தவொரு கூட்டுத் தலைமையின் கீழான நிலையான படைகளும் இல்லை.

உறுப்பினர்கள்

[தொகு]
Picture of the 1966 SEATO conference in Manila
1966 ஆண்டு மணிலாவில் நடந்த சியாட்டோ மாநாடு

தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு என்ற பெயரைக் கொண்டிருந்தாலும், அமைப்பில் பெரும்பாலும் இப்பகுதிக்கு வெளியில் உள்ள நாடுகளையும், அதாவது பிராந்தியத்தில் அல்லது அமைப்பில் ஆர்வம் கொண்ட நாடுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. அவை ஆத்திரேலியா, பிரான்சு, நியூசிலாந்து, பாக்கித்தான் ( கிழக்கு பாகிஸ்தான் சேர்த்து, தற்போது வங்காளதேசம்), பிலிப்பீன்சு, தாய்லாந்து, ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகும்.

வரவு செலவுத் திட்டம்

[தொகு]

1958 மற்றும் 1973 க்கு இடையில் குடிமை மற்றும் இராணுவ வரவு செலவுத் திட்டங்களுக்கான சராசரி பங்களிப்புகள் [12] :

  • ஐக்கிய மாநிலங்கள்: 25%
  • ஐக்கிய இராச்சியம்: 16%
  • பிரான்சு: 13.5%
  • ஆத்திரேலியா: 13.5%
  • பாக்கித்தான்: 8%
  • பிலிபீன்சு: 8%
  • தாய்லாந்து: 8%
  • நியூசிலாந்து: 8%

குறிப்புகள்

[தொகு]
  1. Leifer 2005
  2. Franklin 2006, ப. 1
  3. Jillson 2009, ப. 439
  4. Ooi 2004, ப. 338–339
  5. "Nixon Alone," by Ralph de Toledano, p. 173-74
  6. Boyer et al. 2007, ப. 836
  7. Franklin 2006, ப. 184
  8. Page 2003, ப. 548
  9. Franklin 2006, ப. 186
  10. Weiner 2008, ப. 351
  11. "History of Thai Prime Ministers". Royal Thai Government. Archived from the original on 26 April 2011. பார்க்கப்பட்ட நாள் 22 April 2011.
  12. Pierre Journoud, De Gaulle et le Vietnam : 1945-1969, Éditions Tallandier, Paris, 2011, 542 p. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2847345698

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் வாசிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]