உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கித்தான் அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கித்தான்

இந்தக் கட்டுரை இத்தொடரின் அங்கமாகும்:
பாக்கித்தான்
அரசியலும் அரசும்


அரசமைப்புச் சட்டம்


பாக்கித்தானின் நிலப்படம் - 2002.

பாக்கித்தான் அரசு (Government of Pakistan, உருது: حکومتِ پاکستان‎) கூட்டாட்சி நாடாளுமன்ற அரசியலமைப்பைக் கொண்டுள்ளது. குடியரசுத் தலைவர் நாட்டுத் தலைவராகவும் நேரடியாக அல்லாது தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் அரசுத் தலைவராகவும் உள்ளனர்.[1]

நாட்டை ஆள வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையைப் பின்பற்றும் இந்த அரசு முதன்மையாக செயலாட்சி, சட்டவாக்கம், நீதித்துறை கிளைகளைக் கொண்டுள்ளது. அரசியலமைப்பின்படி அனைத்து அதிகாரங்களும் நாடாளுமன்றம், தலைமை அமைச்சர் மற்றும் உச்ச நீதிமன்றத்தின்பாற் வழங்கப்பட்டுள்ளன.[2] நாடாளுமன்றத்தின் சட்டங்களும் திருத்தங்களும் இந்தக் கிளைகளுக்கிடையேயான அதிகாரப் பகிர்வை வரையறுத்துள்ளன; இவற்றின் அடுத்த நிலையிலான செயலாட்சியர் அமைப்புக்கள், துறைகள், கீழமை நீதிமன்றங்கள் ஆகியவற்றையும் உருவாக்கியுள்ளன.[2] அரசியலமைப்பு அதிகாரத்தின்படி பாக்கித்தான் குடியரசுத் தலைவர் சட்டங்களுக்கு ஒப்புமையும் அவசரச் சட்டங்களின் அறிவித்தலையும் மேற்கொள்கிறார். இவர் அலங்கார நாட்டுத் தலைவராகவே உள்ளார்; தேர்தல்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் தலைமை அமைச்சர் செயலாட்சிப் பிரிவின் முதன்மை செயல் அலுவலராக செயல்படுகின்றார்; இவரே கூட்டாட்சியை நடத்தும் பொறுப்பைக் கொண்டவர். இரண்டு அவைகள் கொண்டா நாடாளுமன்றத்தில் கீழவை தேசிய சட்டப்பேரவை என்றும் மேலவை செனட் எனவும் அழைக்கப்படுகின்றன. நீதித்துறையில் உச்ச நீதிமன்றம், நான்கு மாகாண உயர்நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்களும் உள்ளன;தவிர தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம், இசுலாமியச் சட்ட முறைமை நீதிமன்றங்கள், பசுமைத் தீர்ப்பாயங்களும் உள்ளன. அனைத்து நீதி மன்றங்களும் உச்ச நிதிமன்றத்திற்கு கீழானவை. [2]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "About Government". Government of Pakistan. Archived from the original on 2007-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-03-05.
  2. 2.0 2.1 2.2 Govt. of Pakistan. "Government of Pakistan". Government of Pakistan. Government of Pakistan. பார்க்கப்பட்ட நாள் 18 June 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கித்தான்_அரசு&oldid=3678944" இலிருந்து மீள்விக்கப்பட்டது