கிழக்கு பஞ்சாப்
கிழக்கு பஞ்சாப் என்பது இந்திய-பாகிஸ்தான் பிரிவினையினை போது இந்தியாவுடன் இணைந்த பஞ்சாப் பகுதியைக் குறிக்கும். இந்திய விடுதலையின் போது கிழக்கு பஞ்சாப் பகுதியில் இருந்த இசுலாமியர்கள் மேற்கு பஞ்சாபில் குடிபெயர்ந்தனர். மேற்கு பஞ்சாபில் இருந்த சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் கிழக்கு பஞ்சாப் பகுதியில் குடிபெயர்ந்தனர். தற்கால பஞ்சாப், அரியானா, சண்டிகர் மற்றும் இமாசலப் பிரதேசத்தின் பெரும் பகுதிகள் கிழக்கு பஞ்சாபில் இருந்த பகுதிகளாகும்.
1966இல் கிழக்கு பஞ்சாப், பஞ்சாப், இமாசலப் பிரதேசம், மற்றும் அரியானா என மூன்று மாநிலங்களாக பிரிந்தது.
இதனையும் காண்க[தொகு]