மத்திய பாரதம்

ஆள்கூறுகள்: 26°13′N 78°10′E / 26.22°N 78.17°E / 26.22; 78.17
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Warning: Value not specified for "common_name"
மத்திய பாரதம்
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
[[மத்திய இந்திய முகமை|]]
 

1948–1956
Location of
Location of
1951-இல் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மத்திய பாரதத்தின் அமைவிடம்
வரலாறு
 •  பிரித்தானிய இந்தியாவின் மத்திய இந்தியா முகமையை கலைத்தல் 1948
 •  மத்தியப் பிரதேசம் மாநிலத்தை நிறுவுதல் 1956
பரப்பு
 •  1881 1,94,000 km2 (74,904 sq mi)
Population
 •  1881 92,61,907 
மக்கள்தொகை அடர்த்தி 47.7 /km2  (123.7 /sq mi)

மத்திய பாரதம் (Madhya Bharat, also known as Malwa Union)[1]1947-இல் இந்திய விடுதலைக்கு பின்னர் இது பிரித்தானிய இந்தியாவின் மத்திய இந்திய முகமையில் இருந்த 25 சுதேச சமஸ்தானங்களை இணைத்து 28 மே 1948 அன்று நிறுவப்பட்ட இந்தியாவின் ஒரு ஆட்சிப் பகுதியாகும்[2][3]

மத்திய பாரதம் 46,478 சதுர மைல்கள் (120,380 km2) பரப்பளவு கொண்டிருந்தது.[4] இதன் குளிர்கால தலைநகரமாக குவாலியர் நகரம் மற்றும் கோடைக்கால தலைநகரமாக இந்தூர் நகரம் இருந்தது. இதன் தென்மேற்கில் பம்பாய் மாகாணம் (தற்கால குஜராத் & மகாராட்டிரா), வடமேற்கில் இராஜஸ்தான், வடக்கில் உத்தரப் பிரதேசம், கிழக்கில் விந்தியப் பிரதேசம் மற்றும் போபால் இராச்சியம் (1949–56), தென்கிழக்கில் மத்தியப் பிரதேசம் எல்லைகளாக இருந்தது. மத்திய பாரதப் பகுதி மக்களில் இந்தி மொழி பேசும் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தனர்.

1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, மத்தியப் பாரதப் பகுதிகளுடன், விந்தியப் பிரதேசம் ஆகியவைகள் புதிய மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

மத்திய பாரத மாவட்டங்கள்[தொகு]

1 நவம்பர் 1956-ஆம் தேதிக்கு முன்னர் மத்திய பாரதத்தில் 16 மாவட்டங்கள் இருந்தது.

 1. பிண்டு மாவட்டம்
 2. குவாலியர் மாவட்டம்
 3. முரைனா மாவட்டம்
 4. குனா மாவட்டம்‎
 5. சிவபுரி மாவட்டம்
 6. ராஜ்கர் மாவட்டம்
 7. விதிஷா மாவட்டம்
 8. சாஜாபூர் மாவட்டம்
 9. உஜ்ஜைன் மாவட்டம்
 10. இந்தூர் மாவட்டம்
 11. தேவாஸ் மாவட்டம்
 12. ரத்லாம் மாவட்டம்
 13. தார் மாவட்டம்
 14. ஜாபூவா மாவட்டம்
 15. கர்கோன் மாவட்டம்
 16. மண்டசௌர் மாவட்டம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. India States
 2. "Bhind-History". Bhind district website. Archived from the original on 19 சூன் 2009.
 3.   "Malwa". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 17. (1911). Cambridge University Press. 
 4. Bhattacharyya, P. K. (1977). Historical Geography of Madhya Pradesh from Early Records. Motilal Banarsidass. பக். 53–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120833944. https://books.google.com/books?id=njYpsvmr2dsC&q=Madhya+Bharat+Part+B&pg=PA53. "https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_பாரதம்&oldid=3377516" இலிருந்து மீள்விக்கப்பட்டது