பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம்
பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம் (பெப்சு) ਪੈਪਸੂ | |||||||
---|---|---|---|---|---|---|---|
1947–1956 | |||||||
![]() இந்தியாவின் 1951 நிலப்படம். பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம் கிழக்கு பஞ்சாபில் தனி பிறநாடுசூழ் பகுதியாக உள்ளதைக் காணலாம். | |||||||
தலைநகரம் | பட்டியாலா | ||||||
வரலாறு | |||||||
• இந்தியாவின் விடுதலை | 1947 | ||||||
1956 | |||||||
பரப்பு | |||||||
1941 | 26,208 km2 (10,119 sq mi) | ||||||
மக்கள் தொகை | |||||||
• 1941 | 3493685 | ||||||
|
பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம் (Patiala and East Punjab States Union, PEPSU) 1948க்கும் 1956க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த இந்தியாவின் மாநிலமாகும். இது எட்டு முன்னாள் மன்னர் அரசுகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது: பட்டியாலா, ஜிந்த், நாபா, கபூர்தலா, பரீத்கோட், கல்சியா, மாலேர்கோட்லா, நாலாகர். இந்தப் புதிய மாநிலம் சூலை 15, 1948 அன்று துவக்கப்பட்டது. 1950இல் முறையாக இந்திய மாநிலமாக ஆனது. இதன் தலைநகரமாக பட்டியாலா இருந்தது. இந்த மாநிலத்தின் பரப்பளவு 26,208 சதுர கிமீயாக இருந்தது. சிம்லா, கவுசாலி, கந்தாகாட், தரம்பூர், சையில் ஆகியனவும் பெப்சுவின் அங்கமாயின.
வரலாறு[தொகு]
இந்த மாநிலம் உருவானபோது அப்போதைய பட்டியாலா மகாராசா யதவேந்திர சிங் ஆளுநருக்கு இணையான இராசபிரமுக் என நியமிக்கப்பட்டார். இந்த மாநிலம் இருந்த குறைந்த ஆண்டுகள் முழுமைக்கும் இவர் இப்பதவியில் நீடித்தார். கபூர்தலாவின் மகாராசா சகசித்சிங் உபராசபிரமுக்காக இருந்தார். பட்டியாலா, கிழக்கு பஞ்சாப் அரசுகளின் ஒன்றிய மாநிலத்தை துவக்கும்போது, வல்லபாய் பட்டேல் "நான் மீண்டும் பிறப்பெடுப்பதாக இருந்தால் பட்டியாலா மகாராசாவின் விசுவாசமிக்க பிரஜையாக பிறக்க ஆசைப்படுகிறேன்" எனக் கூறினார்.
பெப்சுவின் முதல் முதலமைச்சராக கியான் சிங் ரேர்வாலா சனவரி 13, 1949இல் பதவியேற்றார். குடியரசு இந்தியாவில் கேனல். இரகுபீர் சிங் அடுத்த முதலமைச்சராக மே 23, 1951இல் பதவியேற்றார்.
தேர்தல்களுக்குப் பிறகு சனவரி 6, 1952இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 உறுப்பினர் மாநில சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. இதில் காங்கிரசு கட்சிக்கு 26 இடங்களிலும் அகாலி தளத்திற்கு 19 இடங்களிலும் வென்றன.
ஏப்ரல் 22, 1952இல் கியான் சிங் ரேர்வாலா மீண்டும் முதலமைச்சரானார். அகாலி தளத்துடனும் சுயேச்சைகளுடனும் இணைந்து "ஐக்கிய முன்னணி" கூட்டணி ஆட்சியை நிறுவினார். மார்ச் 5, 1953இல் இவரது அரசு நீக்கப்பட்டு குடியரசுத் தலைவராட்சி நிறுவப்பட்டது.[1] தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரசு கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ரகுபீர் சிங் முதலமைச்சராக மார்ச் 8, 1954இல் பதவியேற்றார். அவரது மறைவிற்குப் பின்னர் பிரிஷ் பான் முதலமைச்சராக சனவரி 12, 1955இல் பதவியேற்றார். மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் நவம்பர் 1, 1956இல் பெப்சுவின் பெரும்பகுதி பஞ்சாப் (இந்தியா)வுடன் இணையும் வரை இப்பதவியில் இருந்தார்.[2]
பெப்சு மாநிலத்தின் ஒருபகுதி, ஜிந்துவைச் சூழ்ந்த தென்கிழக்கு பகுதி தற்போது அரியானாவில் உள்ளது. சோலன், நலாகர் போன்ற சில பகுதிகள் தற்போதைய இமாச்சலப் பிரதேசத்திற்கு மாற்றப்பட்டன.
உட்பிரிவுகள்[தொகு]
துவக்கத்தில், 1948இல், மாநிலம் எட்டு மாவட்டங்களாக் பிரிக்கப்பட்டிருந்தது:
- பட்டியாலா மாவட்டம்
- பர்னாலா மாவட்டம்
- பட்டிண்டா மாவட்டம்
- பதேகாட் சாகிப் மாவட்டம்
- சங்கரூர் மாவட்டம்
- கபூர்தலா மாவட்டம்
- மகேந்திரகர் மாவட்டம்
- கோகிஸ்தான் மாவட்டம்
1953இல் மாவட்டங்களின் எண்ணிக்கை எட்டிலிருந்து ஐந்தாகக் குறைக்கப்பட்டது. பர்னாலா மாவட்டம் சங்கரூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. கோகிஸ்தான் மாவட்டமும் பதேகாட் மாவட்டமும் இணைக்கப்பட்டு பட்டியாலா மாவட்டத்தின் அங்கமாயின.[3]
இந்த மாநிலத்தில் நான்கு மக்களவைத் தொகுதிகள் அமைந்துள்ளன: மகேந்தரகர், சங்கரூர், பட்டியாலா. கபூர்தலா-பட்டிண்டா மக்களவைத் தொகுதி இரண்டு உறுப்பினர்களைக் கொண்டது.
மக்கள்தொகையியல்[தொகு]
இந்த மாநிலத்தின் மக்கள்தொகை, 1951ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், 3,493,685 ஆக இருந்தது. 19% நகரியப் பகுதிகளாக இருந்தன. மக்களடர்த்தி சதுர கிமீக்கு 133 பேராக இருந்தது.
இதனையும் காண்க[தொகு]
மேலும் அறிய[தொகு]
- Singh, Gursharan (1991). History of PEPSU, India: Patiala and East Punjab States Union, 1948-1956, Delhi: Konark Publishers, ISBN 81-220-0244-7.
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ Singh, Roopinder (16 December 2001). "Rarewala: A Punjabi-loving gentleman-aristocrat". The Tribune. http://www.tribuneindia.com/2001/20011216/edit.htm#1.
- ↑ "States Reorganisation Act, 1956". India Code Updated Acts. Ministry of Law and Justice, Government of India. 31 August 1956. pp. section 9. 16 May 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "History of Jind district". Jind district website. 16 ஜூலை 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 March 2011 அன்று பார்க்கப்பட்டது.